Wednesday, January 5, 2022

பாரதத்தின் சிறப்புகள்

பட்டினத்தார் சொன்னது...

உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.

அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால்  மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது?  கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று  என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம்   வெறுப்பன உவப்பாம் உவப்பன  வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.

நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி  செய்தேன்,
நான்  உதவி  செய்யலனா?
அவர்  என்ன ஆகுறது!நான் பெரியவன்,
நான் தான் வேலை  வாங்கி  கொடுத்தேன்.
நான்..  நான்..  நான்..  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா? நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன் என்று  சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா? நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு முழு அதிகாரமும்,  உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும். 

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்.

---

🙏கைலாஷ் மலையை இதுவரை ஏறியவர்கள் எவரும் இல்லை!
முயற்சித்தவர்கள் வயோதிகர்களாக இறந்தது மட்டுமே மிச்சம்! இதன் மர்மம் என்ன? மலை மொத்தமும் DNA மூலக்கூறுகள்! வியந்த விஞ்ஞானிகள்!*
🙏
12 மணி நேரம் கைலாஷ் மலை ஏறினால் மனித உடல் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது. நகம், முடி அனைத்தும் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது! இது வரை யாராலும் கைலாஷ் மலையை முழுமையாக ஏறியதில்லை. ஏற முயற்சித்தவர்களும் திரும்பியதில்லை.
Dr Ernst Muldashev இரஷ்ய விஞ்ஞானி:

எர்நெஸ்ட் முல்டஷேவ் என்னும் இரஷ்ய விஞ்ஞானி கைலாஷ் மலையில் உள்ள இரகசியங்களை உடைத்தெரிய எண்ணினார். 
அதன்படி கலாஷ் மலையை ஆராய்வதற்காக வந்தார். 

இதுவரை ஏன் எந்த மனிதனாலும் கைலாஷ மலையை ஏற இயலவில்லை என்பது குறித்து ஆராயத் தொடங்கினார். பல திபெத்தியர்கள் மற்றும் சைபீரியர்களிடம் விசாரித்ததில் கைலாஷ் மலையில் ஷம்பாலா என்னும் குடிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். 
முதலில் நம்பாமல் இருந்த இரஷ்ய விஞ்ஞானி பிறகு இரவில் மலையை சுற்றி ஏற்பட்ட சத்தத்தை வைத்து மலையின் உள்ளே யாரோ வசிப்பதாக உறுதிபூண்டார்.

 அதுமட்டுமல்லாமல் இந்த உலகின் ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் கருதினார்.

வயதாகி இறக்கும் மர்மம்:
இந்த மலையை ஏற முயற்சித்த அனைவரும் வயதாகி இறந்திருந்தனர். அதாவது 24 வயது மதிக்கத்த ஆள் மலையை ஏற முயற்சித்தால் 90 வயதானவராக மாறி வயோதிகம் காரனமாக இறந்திருக்கிறார். எவ்வாறு குறுகிய காலத்தில் இவ்வாறு வயதாக சாத்தியமாகும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்றளவும் விந்தையாகவே உள்ளது.
DNA வடிவம்:

இரஷ்ய விஞ்ஞானி எர்னஸ்ட் முல்டஷேவ் கைலாய மலை மொத்த மலையையும் திட்ட வரைபடமாக தீட்டினார். தீட்டி முடித்து பார்த்ததும் அதிசயித்துப் போனார். 
மொத்த வரைபடமும் DNA வடிவில் காட்சியளித்தது. 

இது அவருக்கு பெருத்த ஆச்சரியத்தையும், ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்ற அவரது எண்ணமும் முற்றிலும் உண்மைதான் என்ற தகவலை அளித்தது.
மனிதனால் செய்யப்பட்டதா?
அவரின் ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டுமொத்த மலையையும் (Pyramid) மனிதனின் பெரிய கைகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முடித்தார். இவ்வளவு பெரிய மலையை செய்யும் பெரிய கைகள் எந்த உயிரினத்துக்காவது இருக்கிறதா என்ன?

ஆதாரச் சொடுக்குகள்:
தீ சட்டி எடுப்பது, அக்னி மிதிப்பது இதெல்லாம் செய்ய கடவுள் அருள் தேவை இல்லை என்று விதண்டாவாதத்துக்கு செய்துகாட்டும் நாத்தீகவாதிகள், கைலாயம் ஏறுவதை ஒரு சவாலாக ஏற்று செய்து காட்டலாமே!

அருந்தவ முனிவர்கள் வருந்துதல் ஆகுமோசிறந்தவர் சிந்தையால் கலங்கிட கூடுமோ
பெருந்துயர் ஏய்தினும்
இடிந்திடா நிற்கவேமருந்தென 
சீவனை சிவனாய் ஆக்குவாய்
🙏
##சேலம்மாஷ்லே##🙏
---

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| ஸ்ரீரங்கம் கோயில் பூலோகத்தில் வந்த கதை ||

ப்ரம்ம தேவர் ஸத்திய லோகத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அனுதினமும் வழிபட்டு வந்தார். 

அப்போது பூலோகத்தை ஆண்ட சூர்யகுல மன்னனான இக்ஷ்வாகு ப்ரம்மாவை நோக்கி தவம் இருந்தான். 

மன்னனின் தவக்கனல் ஸத்திய லோகத்தைச் சென்றடைந்தது. 

நேரில் தோன்றிய ப்ரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். 

ப்ரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். 

ப்ரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். 

இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். 

அவரது காலத்தில், விபீஷணர் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப் பெருமாளை பரிசாகப் பெற்றார். 

ப்ராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். 

காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். 

அரங்கம் என்னும் அம்மேட்டுப் பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. 

தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். 

காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. 

தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். 

ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. 

அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.

திருச்சி-பெயர்க்காரணம்

ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 

108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. 

இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள் கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். 

அக்காலத்தில் திருச்சி ஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. 

மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. 

இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். 

பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.

அ முதல் அஃகு வரை.

#ஸ்ரீரங்கம்_கோயில் 
#ரகசியங்கள்

*பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். 

*ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது.

*400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில் ஆகும்.

*ஸ்ரீரங்கம் பெருமாள், ப்ரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள் ஆகும்.

*ஸ்ரீரங்க பெருமாள் இஷ்வாகு மன்னன் முதல் ஸ்ரீராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம்.

*ஸ்ரீராமர்,ராவணனை அழித்த பின்பு,அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். 

அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறுவன் [விநாயகர்] மூலம் தரையில் வைக்கிறார். 

பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. 

அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

*தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது.

*தர்மவர்மன் வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. 

அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

*சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. 

*இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

*மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.

*பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. 

*இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

*கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. 

விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

*கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

*கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. 

பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. 

அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகமாகும்.

*ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

*2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. 

இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. 

வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். 

ஸ்ரீராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். 

கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 

7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. 

*108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

*ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். 

*திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். 

மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

#mahavishnuinfo
---

சென்னையைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் நான்கு இடங்களில்தான் கணிசமாக வசிப்பார்கள்.

1) மாம்பலம் பகுதி(அசோக் நகர், கோடம்பாக்கம்)

 2) மயிலாப்பூர் பகுதி (மயிலை, ஆழ்வார்பேட்டை),

3) திருவல்லிகேணி பகுதி (குறிப்பாக வைணவர்கள்) 

4) நங்கநல்லூர். 

இதில் மயிலாப்பூர் வகையறா அட்வகேட்ஸ், ஆடிட்டர்ஸ், என்று அப்பா தொழிலையே தொடர்ந்து அபிவிருத்தி செய்து  தனி வீடு,கார்கள் என்று பட்டையை கிளப்பும் மேட்டுக்குடி.

திருவல்லிக்கேணி கோஷ்டி வெளிச்சம் அவ்வளவு இல்லாத, காற்று புகாத, அறைகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதிக்கு கைங்கர்யத் தொண்டு சாதித்துக்கொண்டு வாழ்பவர்கள்.

நங்கநல்லூர்காரர்கள் அநேகம் பேர் ரிட்டையர் ஆகி நகர நெரிசல் தாங்கமுடியாமல் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள்.

இவர்கள் எங்கு போனாலும் ஸ்ரீரங்கம் போல மெதுவாக நடந்து, ஆஞ்சநேயரை சேவித்து, ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு,  ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டே 'உங்காத்துல கரண்ட் வந்துடுத்தா' என்று கேள்வி கேட்கும் ரகம். 

' கிரி ட்ரடேர்ஸ் , நீல்கிரிஸ்ன்னு எல்லாமே இங்கேயே வந்துடுத்து தெரியுமோ' என்றும் பெருமை பாராட்டக் கூடியவர்கள்.

மாம்பலம்காரர்களை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்.
படுக்க ஒரு இடம் வேண்டும். 
கேஸ் அடுப்பில் குக்கர் வைத்துவிட்டு, தாளித்து கொட்ட கடுகு வேண்டுமெனில், வாசலில் ஒரு நாடார் கடையோ, பாய் கடையோ இருக்க வேண்டும். 
காலை அஞ்சுமணிக்கு தொடங்கும் பரபரப்பு இரவு பத்து மணிக்குத்தான் அடங்கும்.

"பதினஞ்சு ரூபாய் சொல்றயேம்மா, பன்னெண்டு ரூபாய் போட்டுக்கப்டாதா" என்று பேரம் பேசி வாழைத்தண்டு முதல் துவாதசிக்கு அகத்திகீரை வரை வாங்கக் கூடியவர்கள்.  
        
சிறுகுறிஞ்சான் முதல் சித்தரத்தை வரை விற்கும் நாட்டுமருந்து கடைகள், பசுஞ்சாணி வறட்டி, தர்ப்பை, கூர்ச்சம், பவித்ரம், நோன்புக் கயிறு என்று அனைத்து பூஜா சாமான்களுக்கு  ஹரிகிருஷ்ணன் ஏஜென்ஸீஸ், 
மணக்க மணக்க சாம்பார் பொடி, இலை வடாம்,
புளிக்காய்ச்சல் என்று பலவற்றிற்கும் சாரதா ஸ்டோர்ஸ், ஆபீஸ்லேந்து வர்றதுக்கு லேட்டாயிடுத்தா, ட்யூஷன் போகறதுக்குள் குழந்தைகள் பசியை போக்க இருக்கவே இருக்கு, 
வெங்கட்ரமணா 
போளி ஸ்டால்!!

அவசர ஜவுளிக்கு சிவன்மலை ஆண்டவர்.
சகாய விலையில் தரமான வைத்தியம் பார்த்துக்கொள்ள ஹெல்த் செண்டர்.

அயோத்யா மண்டபம் ஸ்ரீராம ஸமாஜில் எவ்வளவு அரசியல் இருந்தாலும், எப்பொழுதும் ஏதோ பூஜையோ, நாமசங்கீர்தனம் போன்ற வைபவங்களோ நடந்து கொண்டே இருக்கும். 
ஒரு பக்கம் 'பாம் பாம்' என்று ஹாரன் அடித்துக்கொண்டே பல்லவன் பஸ் போய்க் கொண்டிருக்க இத்தனை இரைச்சல் நடுவிலும் நித்யஸ்ரீ ராமா ராமா என்று பாடிக்கொண்டு இருப்பார். 
இங்கு ஹிந்தி,ஃபிரெஞ்சு கற்றுக்கொடுக்கப்படும் என்ற போர்டும், ஐந்து வீடுகளுக்கு ஒன்றில் 'இங்கு வாய்ப்பாட்டு கற்று தரப்படும்' என்ற போர்டும் காணப்படும். 

"எல் கே ஜி முதல் சி ஏ வரை அனைத்து வகுப்புகளுக்கும் ட்யூஷன் எடுக்கப்படும்" 
இந்த வகையான போர்டுகள் இல்லாத வீடுகள் அரிது. 

நீட், ஜெ ஈ ஈ என்று பல்வகையான கோச்சிங் செண்டர்களுக்கும் ஒரு கூட்டம் படையெடுக்கும்.
 
காலை ஏழுமணி முதல் ஆர்யகௌடா ரோட்டில் இன்ஜினியரிங் காலேஜ் பஸ்களிலும், ஐ டி கம்பெனி பஸ்களிலும் பெண்கள் அதிக அளவில் ஏறுவார்கள்.

நூறுவீடுகளுக்கு ஒன்று கல்யாண மண்டபமாகவோ அல்லது ஏ சி மினி ஹாலாகவோ மாற்றப்பட்டு இருக்கும்.

 ஆறுமாதத்திற்கு முன்பு பதிவு பண்ணாவிட்டால் கிடைக்காது. 
அவர்களே வரும் விருந்தினர்களுக்கு தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸும் அங்கேயே ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். 

எல்லா சமையல் கான்ட்ராக்ட்காரர்களும் காஞ்சி பெரியவர் படத்தை பெரிதாக போட்டுத்தான் உங்களிடம் பிசினெஸ் பேசுவார்கள்😇

அதற்காக சகாயமான விலை இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
 தொழில் வேறு;
 பக்தி வேறு. தொழிலுக்குத்தான் பக்தி.

வீட்டில் குக்கரில்  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு கறி, கூட்டு, ரசம், சாம்பார் என்று தேவைக்கேற்ப  தஞ்சாவூர் மெஸ்ஸில் வாங்கிக்கொள்ளும் குடும்பம் அங்கே கணிசமானோர் உண்டு.                        

போஸ்டல் காலனியில் சில இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால் கூட 
காற்றுதான் வரும்.
சில குடியிருப்புகளில் நாற்பது ஆண்டுகாலமாக சகலத்திற்கும் லாரி தண்ணீரை நம்பித்தான் தினப்படி வாழ்க்கையே.

கொசுக்கடியோ, சாக்கடையோ, 
தண்ணி கஷ்டமோ  இவையெல்லாம் ஒரு சராசரி மாம்பலவாசிக்கு  பொருட்டே அல்ல. 

ரியல் எஸ்டேட் சரிவோ, பணமதிப்பிழப்போ இங்கு ஒன்றும் கிடையாது.

சதுரஅடி பதினாலாயிரம்  ரூபாய்க்கு குறைவாக ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்காது. 

இந்த பின்னணியில் வளர்ந்து   ஐ ஐ டி முதல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வரை  போய்  படித்துவிட்டு அமெரிக்காவிற்கு உழைக்கிறார்கள். 

இந்த சந்து பொந்துகளில் விளையாடித்தான் ரவி அஷ்வின் உலகத்தின் முதல்தர சூழல் பந்து வீச்சாளராக வலம் வருகிறார்  
.
கிரேசி மோகன் ஒரு பேட்டியில் சொன்னார், அவருக்கு மைலாப்பூரில் இருந்து மாம்பலம் வந்தாலே ஹோம் சிக் வந்துவிடுமாம். மாம்பலம்வாசிகளுக்கும்  அப்படித்தான்.

சென்னை வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில், சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம் 🙏

(சென்னை வாரம் கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்டது) Brahmin at Chennai
---

*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.
அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத  இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு *வியானப் பிராணா* வை அவர் தக்கவைத்துச் சென்றதால், எத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்து கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

His passing was marked by an extraordinary phenomenon. A notarized statement signed by the Director of Forest Lawn Memorial‑Park testified: “No physical disintegration was visible in his body even twenty days after death….This state of perfect preservation of a body is, so far as we know from mortuary annals, an unparalleled one….Yogananda’s body was apparently in a phenomenal state of immutability.”

அவர் உடல்  (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்
இன்றும்  அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது. 

இவரது  குரு *யுக்தேஸ்வரகிரியும்* இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அரிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மருநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. *மகா சமாதி* என்றழைகப்படும். தன் உடலை ஒரு சட்டையை  கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது *மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. அவ்வளவு தான்.

*கபீர் தாசர்* மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.
 
*ரமணர்* மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது.
 
*பட்டினத்தார்* பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். தன்  அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு *சிவலிங்கம்* இருந்தது.

*மாணிக்கவாசகர்* சிதம்பரம் நடராஜர் சன்னதி  கருவறையில் வெட்டவெளியில் ( *வான் பொருள்-ஆகாயம்* ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார். 

150 ஆண்டுகளுக்கு முன்பு *இராமலிங்கசுவாமிகள்* வடலூரில் ஒருதனி அறையில் *ஒளிஉடலோடு* மறைந்து விட்டார்.

பரமஹம்ஸயோகனந்தரின் *யோகா உடல்* 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.

*ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய  அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.*🙏🙏
---

திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி  சொல்லிக் கொண்டிருந்தார் , அவர் சொல்லி முடித்ததும் ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க
,
அவர் லேசான புன்னகையுடன் சொன்னார் ""ஐயா நான்   தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன்  , என்னை போல் எவரும் கடவுளையும் , கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்"""
 .
""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலும் குளிக்க வந்தேன் , அலையின் சுழற்ச்சியில் உள்ளே சென்று விட்டேன் , என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்""" 
,
"""என்னையும் மறந்து முருகா முருகா முருகா கத்தினேன் , யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன் ,  அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன் ""
.
""எழுந்து நின்று பார்த்தேன் கண்ணுக்கு எட்டிய தூரம் எவரும் தென்படவில்லை , கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு உரத்த குரலில் """முருகா முருகா முருகா "" என சொல்லிக்கொண்டே முருகப்பெருமான் சன்னதியில் விழுந்து வணங்கினேன்
,
அன்று முதல் நான் கடலில் விழுந்து பிழைத்த நாளையே ""எனது பிறந்தநாளாக ""கொண்டு ,  ஒவ்வொரு  வருடம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்கி மகிழ்கிறேன் என்ற அந்த பக்தர் சொல்ல 
,
எங்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட , முருகப்பெருமானை தரிசனம் செய்தோம் , திருச்செந்தூரில் இருந்து .
---

சகுனி

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,

 இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார். 

கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.

நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான். 

அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.

மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.

இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.

எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.

தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.

மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.

 ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.

உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.

 இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை
விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். 

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.

நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...
எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்
காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.

யாகம் தொடங்கலாமே...
சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார். 

ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன். 

யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.

குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.

 வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. 

என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. 

ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. ?. கேட்டான் அர்ஜுனன்.

அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன். 

போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும்  இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. 
உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

 அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.

அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.

என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.

 கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.

பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். 

இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.

துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.

 இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...

தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.

என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.

அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.

 கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.

 தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?

போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.

பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.

பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,
எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.

பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.

கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். 

பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.

யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

 பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.

சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.

அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே  அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.

 என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.

அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். 

"என்னை விரும்பி ஏற்பதோ.. 
விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. 
என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.."

 என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன். 

---

Dedicated to Salem Citizens by சுஜாதா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.
பேலஸ் தியேட்டர் சேலம்
ஒரு சமயத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான திரையரங்குகளைக் கொண்ட நகரம் என்ற சிறப்பினை பெற்ற நகரம் சேலம். அந்த திரையரங்களில் பேலஸ் ஒரு முக்கியமான திரையரங்கமாக  விளங்கியது.

பேலஸ் தியேட்டர் மதுரை தங்கம் போல ஆசியாவிலேயே அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவு வசதி கொண்டது அல்ல. சென்னையில் அமைந்திருந்த சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்ட் போன்ற பிரமாண்டமான நவீன கொட்டகையும் அல்ல. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கு.

சென்னையில் இருந்து குடி பெயர்ந்து (1960 ) சேலம் வந்தவுடன் அப்பா சேலம்-ஈரோடு மின்சார வினியோக கம்பெனியில் சேர்ந்ததும் சேலம் சுப்பராயன் தெருவில் ஒரு லைன் வீட்டில் குடியேறியதும் என் சேலம் வாசத்தின் ஆரம்பம். அதுதான் சினிமா என்னும் ஆசையை எனக்குள் அறிமுகப்படுத்தியதும் , அதை வளர்த்ததும் , அது ஆழமாய் வேரூன்றி இன்றுவரை நிலை பெறச்செய்ததும் அங்குதான்.

நாங்கள் குடி போன வீட்டுக்கு இடது புறத்தில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். அது சுப்பராயன் தெருவை ஆரம்பித்து வைப்பது போல அமைந்திருக்கும். அந்த ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அந்த சாலையின் முடிவில் பேலஸ் தியேட்டர் கம்பீரமாக இருக்கும்.
இடைப்பட்ட தெருதான் டாக்டர் சுப்பராயன் தெரு. அதன் மத்தியில்தான் எங்கள் வீடு அமைந்து இருந்தது. நான் படித்த பள்ளி 
(G. H. M. H. S) கொஞ்ச தூரம். 
(அது சென்ட்ரல் தியேட்டர் பக்கத்தில். இப்படித்தான் நான் அறிந்த சேலத்தை கொட்டகைகளோடு சேர்த்துத்தான் என்னால் சொல்ல முடியும்) அது எனக்கு வருத்தத்தினை தரவில்லை. ஏனென்றால் பேலஸ் தியேட்டர் பக்கத்திலே என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்ததுதான் காரணம்.

பேலஸ் திரையரங்கின் கம்பீரத்தை இரட்டித்துக் காட்டியது அதற்கு முன் அமைந்திருந்த திறந்த வெளியும் அதில் அமையப்பெற்றிருந்த புல்வெளி மேடையும்தான். எனக்குத் தெரிய அங்கு அமர்ந்து காற்று வாங்கியவாறு சினிமா பார்க்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருபது முப்பது பேர் இருக்கும். இவர்களைத் தவிர டிக்கெட் வாங்கிவிட்டு மனைவிக்காக காத்திருப்பவர்கள் கொஞ்சம். ஐந்து ரூபா டிக்கெட் எட்டு ரூபாய் என்று விற்கும் ஆண் பெண் கறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் இப்படி ஐம்பது பேர் தாராளமாக நடமாடும் அளவுக்கு பெரிய முகப்பை உடையதாக இருந்தது பேலஸ் தியேட்டர்.

பெண்களுகென்று நாற்பது பைசா , தொண்ணூறு பைசா கவுண்டர் கூண்டுகளும், அதே வகுப்புக்கு ஆண்களுக்கு கொட்டகைக்கு வெளியே கூண்டுகளும் இருக்கும். அதற்கு அடுத்த வகுப்பு  ₹1.30 இரு பாலாருக்கும் பொது வரிசை. அதற்கு மேல் 1.70 பாக்ஸ் ₹3 இவை கொட்டகையின் உள்ளே மாடிக்கு போகும் படியின் கீழ் ஒரு கவுன்ட்டர். இங்கு டிக்கெட் வாங்கிவிட்டு அமர இருக்கைகள் இருக்கும். இவர்கள் கொட்டகையில் நுழையும் வாயிலில் பார்வையாக பன்றி மலை சுவாமிகள் படமும் அதன், அருகே இருந்த கடிகாரமும் இன்னும் நினைவில் இருக்கின்றது. கொட்டகையின் பின் புறம் ஒரு தோட்டம். அதில் கத்திரி , வெண்டை கீரை போன்றவை பயிரிடப்படும். பெரிய கிணறு, அதில் நீர் இரைக்க ஒரு பம்ப் செட்.
மிகவும் பசுமையாக இருக்கும் அந்த நிலத்தை கவுண்டர் என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அவர் எங்களுக்குத் தெரிந்தவர். அதனால் முதல் நாள் டிக்கெட் வாங்க அவர் செல்வாக்கு எங்களுக்கு பயன் பட்டது.

கடைசி வகுப்புக்கே அமர சேர் வசதி இருந்த முதல் கொட்டகை பேலஸ். மேல் வகுப்புகளுக்கு குஷன் சேர். பாக்ஸ் வகுப்புக்கு தனித்தனியான குஷன் சீட். 
நல்ல காற்று வசதி. மாலைக்காட்சிகளின் போது கதவுகளைத் திறந்து வைப்பார்கள். இயற்கை காற்றும் வரும். இந்த அருமையான சூழலில் எவ்வளவு பாடாவதி படமும் நன்றாகவே இருக்கும். பேலசுக்கு அருகே வேறு கொட்டக்கைகள் கிடையாது. அதனால் இங்கு படம் பார்க்க வருபவர்கள் வேறு படத்துக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் வருபவர்களாக இருக்க மாட்டார்கள். கமிட்டட் ஆடியன்ஸ் வகையைச் சேர்ந்தவர்கள். கொட்டகைக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டு. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் சைக்கிள் ஸ்டாண்டினை பயன் படுத்துபவர்களுக்கு உண்டு. அதனால் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்க சைக்கிளில் வருபவர்களும் உண்டு.

கொட்டகையின் அருகே கோயம்பத்தூர் லாட்ஜ் , சிவ சக்தி வினாயகா, போன்ற ஹோட்டல்களும் சற்று காலாற நடந்தால் கிருஷ்ணா பவனும் உண்டு. சினிமா பார்த்துவிட்டு டிபன் சாப்பிடுவது சுகமான அனுபவம். ஹோட்டலில் டேபிள் கிடைக்காது என்பதால் சிலர் சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளைத்  தவிர்த்துவிட்டு ஹோட்டல்களுக்கு விரைபவர்கள் உண்டு.

மற்றொரு திரையரங்கமான.  நியூ சினிமாவும் பேலஸ் தியேட்டரின் உரிமையாளரான பொம்மண்ண செட்டியாருடையதே. சில படங்கள் ஒரே சமயத்தில் இவ்விரண்டு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு   படச்சுருள் இரண்டு கொட்டகைகளுக்கும் ஆட்டோவில் பயணித்தது ஆச்சரியாமான விஷயமாக  இருந்தது. பி.ஆர்.சேகர் என்னும் ரஞ்சி கிரிக்கெட் பிளேயர் இவர் பேலஸ் செட்டியாரின் மகன். அவர் ரஞ்சி விளையாடியதை விட பேலஸ் கொட்டகை இவருடையது என்பது எங்களுக்கு அவர் மீது பொறாமை கொள்ளவைத்த விஷயம்.
செட்டியாரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் பேலஸ் தியேட்டர் மேனேஜரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1980 வரை வெள்ளை ஜிப்பா அணிந்து, அம்மைத் தழும்போடு கூடிய முகத்தோடு எப்போதுமே ஒரு சிடுசிடுத்த முகத்தோடு தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்வையிடும் மனிதராக அவர் காணப்பட்டார்.

பாசமலர் இக்கொட்டகையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி விழா எடுத்த போது சிவாஜியும் சாவித்திரியும் தேரில் ஊர்வலமாக (மலர்களைப் போல் தங்கை பாடலில் வருமே அதே போன்ற தேர்) அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பார் மகளே பார் படமும் இங்கு வெற்றிகரமாக ஓடியது. அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை, இருவர் உள்ளம், நிறை குடம் போன்ற பல சிவாஜியின் வெற்றிப் படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடினாலும் இங்கு திரையிடப்பட்ட கர்ணன் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தினர் மிக அதிகமான முறை பார்த்த படம் இது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறை பார்த்திருப்பார்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் விடாமல் ஒரு வாரம் இரவுக்காட்சி பார்த்தார்கள். அதில் மூன்று முறை நானும் உடன் சென்றிருந்தேன்.

ஒரு விசித்திரமான விஷயம். பொதுவாக எம்ஜிஆர் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்காது. ஆனால் தலைவன், தாலி பாக்கியம், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள் என பல எம்ஜிஆர் படங்கள் தோல்வியடைந்தது என்றாலும் பின்னாட்களில் எங்கள் தங்கம், குமரிக்கோட்டம் போன்ற படங்கள் அந்த அவப் பெயரைப் போக்கின.

பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த், புன்னகை இதில்தான் திரையிடப்பட்டது. ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இதில்தான் திரையிடப்பட்டது. எங்க வீட்டு பிள்ளைக்கு பிறகு அவர்களது தயாரிப்பில் எங்க வீட்டு பெண் திரையிடப்பட்டதும் பெரிய எதிர்பார்ப்புடன் போய் ஏமாந்ததும் இங்குதான். கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, ரஜினியின் காளி, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், பாக்கியராஜின் மௌனகீதங்கள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களும், அதே கண்கள் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. 

முதன் முதலில் காலை காட்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பழைய ஆங்கில தமிழ் படங்களை சனி, ஞாயிறுகளில் திரையிட்டது. Mad Mad world, முதல் தேதி, எதிர்பாராதது ஆகிய படங்களைப் பார்க்க வைத்தது பேலஸ் தியேட்டர்.

பல வருடங்கள் அதிகமாக வெற்றிப் படங்கள் திரையிடப்படாத காலத்தில் கரகாட்டக்காரன் திரையிடப்பட்டது. பக்கத்து ஊர்களை இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து படம் பார்த்த அதிசயத்தை ஒரு நாள் , இரு நாட்கள் அல்ல. பல மாதங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
தினமும் ஐந்து காட்சிகள், டிராபிக் ஜாம் ஏற்பட்டு திருப்பிவிடப்பட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.

எல்லா வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் பேலஸ் கொட்டகைக்கும் ஏற்பட்டது.
பல திரையரங்குகள் மூடப்பட்ட பொழுது பேலஸ் கொட்டகையும் கிடங்காக மாறி இப்பொழுது பெரிய அபார்ட்மெண்ட் இருப்பதாக அறிகின்றேன்.

1990 ல் சேலத்தை விட்டு போன நான் 
பேலஸ் தியேட்டர் மூடப்பட்டதை கேள்விப்பட்டேன்.
என் நினைவுகளில் இருக்கும் பேலஸ் தியேட்டர் என்றும் அப்படியேதான் இருக்கும். அப்படியேதான் பலரின் நினைவுகளில் ஏதாவது ஒரு திரையரங்கம் இருக்கும். இப்பதிவைப் படிக்கும் பொழுது அத்திரையரங்குகள் ஞாபகம் வரும்.
---

*கண்கள் ஈரமாக்கும் அரங்கன் கணக்கு......*

  _*நடந்தவை நம் மூன்று பேருடன் இருக்கட்டும்..*_

வானம் பெரிதான மழைக்கு ஆயத்தமாகி இருந்தது. நல்ல வேளையாக  வெங்கடேசன் பெருமழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அரங்கன் கோயிலை எட்டி விட்டார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்றும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவிப்புகள் வர ஆரம்பித்திருந்தன. அதனால் காரில் நூறு கிலோமீட்டர் தூரப் பயணம் செய்து அரங்கனைத் தரிசிப்பதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. ’இன்னோரு நாள் போனால் என்ன, அரங்கன் ஓடியா போய் விடுவார்?’ ஆனால் நவம்பர் இருபதாம் தேதியான இன்று அரங்கனைத் தரிசிக்காமல் இருக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாகக் கிளம்பி வெற்றிகரமாக வழக்கமான மதிய நேரத்தில் வந்து சேர்ந்தும் விட்டார்.

கடந்த பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த சந்திப்பைப் புயலும், மழையும், எதிர்ப்பும் நிறுத்தி விட முடியுமா என்ன! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான தடங்கல் வந்து கொண்டு தானிருந்தது. உடல்நிலை சரியில்லாமை, கார் பழுது, வியாபார அவசரங்கள், திருமணங்கள், இழவுகள் என்று அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தடை முன்னே வந்து நிற்க, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு அவர் அந்த நாளில் அரங்கனைத் தரிசித்து வந்திருக்கிறார். இன்றும் வருகையில் வழியெல்லாம் மழையால் போக்குவரத்து நெருக்கடி தான். சில இடங்களில் நிறைய நின்று, சில இடங்களில் ஊர்ந்து தான் வரவேண்டி இருந்தது. ஆனால் இதெல்லாம் அரங்கன் வைக்கும் பரிட்சைகளல்லவா?

காரிலிருந்து இறங்கி வெங்கடேசன் அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அரங்கனுடைய அந்தக்கோயில் மிகப்பழைய கோயில். திருவிழாக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் அதிகம் கூட்டம் காணாத கோயில். கனத்த இரும்புச் சங்கிலிகளும், பித்தளைக் குமிழ்களும், மரச்செதுக்கு சிற்பங்களும் கொண்ட உயரமான கோயில் கதவுகள் மதிய உச்சி பூஜை முடிந்து சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் வலது கதவின் கீழ்ப்பகுதியில் சிறியதாய் ஒரு சின்னக்கதவு இழைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கதவு இரவு வரை எப்போதும் திறந்தே இருக்கும். அந்தச் சிறிய கதவு வழியாக வெங்கடேசன் கோயிலுக்குள் நுழைந்தார். உள்ளே யாருமே இல்லை. இனி மாலை நான்கு மணி வரை இப்படித் தான் கோயில் வெறிச்சோடிக் கிடக்கும். அதன் பின் தான் சில பக்தர்களாவது வருவார்கள். இப்போது மணி இரண்டரை. ஒன்றரை மணி நேரம் அரங்கனோடு தனியாக இருக்கலாம்.

வெங்கடேசன் எப்போதுமே இந்த நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்து வருவார். இறைவனிடம் ஒப்பிக்க இந்த வருடத்திய கணக்கு நிறைய இருந்தது. அது கூட்டம் இருக்கும் போது சாத்தியப்படுவதில்லை. பூசாரி உட்பட இடைஞ்சல் போலத் தான் அவருக்குத் தோன்றும். கற்பாளங்களாலான ஈரத்தரையில் சில இடங்களில் பாசி படர்ந்திருந்தது. கவனமாக அதில் கால் வைத்து மூன்று முறை சுற்றி விட்டு கருவறை முன் இருந்த உள்மண்டபத்திற்கு அவர் வந்தார்.

அரங்கன் கம்பிக்கதவுகளிற்குப் பின்னால் கருவறையில் பள்ளி கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் கூடுமான வரை இருளைப் போக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. அரங்கனை மங்கலான ஒளியில் தரிசித்த போது வெங்கடேசனுக்கு மெய்சிலிர்த்தது. மனம் லேசானது. “அரங்கனே உன் பக்தன் வந்திருக்கிறேன்....” மண்டபத்தில் அரங்கனை ஒரு முறை வணங்கி விட்டு அவனைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்களில் காலத்தை மறந்து போனார்.....

பத்து வருடங்களுக்கு முன்னால் இதே நவம்பர் இருபதாம் தேதி இதே நேரத்தில் இதே இடத்தில் அரங்கன் முன் கனத்த இதயத்துடன் வந்தவர் அவர். இப்போதைய வானம் போல அன்று அவர் மனம் இருண்டிருந்தது. தற்கொலை செய்து கொள்ள மனம் தீர்மானித்திருந்தது. அதை நிறைவேற்ற அவர் சட்டைப் பையில் விஷம் இருந்தது. வியாபாரத்தில் பெருத்த நஷ்டம், பல இடங்களில் பெருங்கடன், பல இடங்களிலிருந்தும் ஒருமித்த நெருக்கடி, அதிலிருந்து மீள வழியில்லாமை, எல்லாமாகச் சேர்ந்து அவரை இந்த முடிவுக்கு வரவழைத்திருந்தன. மனைவிக்கு ஒரு மன்னிப்புக் கடிதமும், மனைவியையும், மகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி மாமனாருக்கு ஒரு உருக்கமான வேண்டுதல் கடிதமும் அவரது சட்டைப்பையில் இருந்தன. அதே வேண்டுதலை தன் இஷ்ட தெய்வமான அரங்கனிடம் வேண்டி விட்டு இறக்கத் தான் இந்தக் கோயிலுக்குள் அன்று வந்திருந்தார்.

அன்று அவர் அரங்கன் முன் அவர் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார். ”அரங்கனே நான் நிறைய முட்டாள்தனங்கள் செய்திருக்கிறேன் நிறையவே அஜாக்கிரதையாக இருந்திருக்கிறேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் உணர்ந்த இப்போதோ எல்லாமே தலைக்கு மேலே போய் விட்டது. சரி செய்ய வழியே இல்லை. அத்தனை தவறும் என்னுடையது. என் தவறுகளுக்காக என் மனைவியும், மகளும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற என் மாமனாருக்கு தீர்க்காயுளையும், சக்தியையும் கொடு.....”

அழுது ஓய்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அரங்கனிடமும் மனதார விடைபெற்றுக் கொண்டு அவர் எழுந்து நகர்ந்த போது காலை ஏதோ இடறியது. ஒரு சிவந்த தோல்பை அது. யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். தோல் பையின் ஜிப் சற்றே விலகி உள்ளே கட்டுக் கட்டாய் பணம் தெரிந்தது. ஒரு கணம் அவரது இதயத்துடிப்பு நின்று போனது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. குனிந்து ஜிப்பை விலக்கிப் பார்த்தார். கட்டுக் கட்டாய் பணத்துடன் தங்க நகைகளும் இருந்தன. இதயம் சம்மட்டியாக அடிக்க ஆரம்பிக்க, கோயிலை அவசரமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். யாருமே இல்லை. அவருக்கு வியர்த்தது. மறுபடி அரங்கன் முன் அமர்ந்து பணத்தைக் கணக்கிட்டார். இருபது லட்ச ரூபாய் இருந்தது. தங்கநகைகள் சுமார் ஐம்பது பவுனாவது இருக்கும்.

அரங்கனைப் பார்த்தார். அரங்கன் படுத்தபடியே மந்தஹாசப் புன்னகை பூத்தான். யாரோ இறைவனுக்கு என்று இதை ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலத் தோன்றியது. இறைவன் அவர் மீள ஒரு வழியைக் காண்பித்திருக்கிறான். ‘இதை வைத்துக் கொண்டு மறுபடியும் ஆரம்பி...” என்று அரங்கன் சொல்வதாக ஒரு தோணல். கலியுகத்தில் இவ்வளவு சீக்கிரம் கடவுள் கருணை காட்டுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. மீண்டும் அழுதார். அந்தப் பையை எடுத்துக் கொண்டு வந்தவர் விஷத்தை குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு, சட்டைப் பையில் வைத்திருந்த கடிதங்களை சுக்கு நூறாகக் கிழித்து விட்டு ஊர் திரும்பினார்.

அவர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. கடன்களைத் தீர்த்து விட்டு மீதி இருந்த பணத்தைத் தொழிலில் போட்டு கவனமாகவும், கஷ்டப்பட்டும் உழைத்தார். இறைவனுடைய முதலும் அவருடைய உழைப்பும் சேர்ந்ததால் நல்ல பலன் கிடைத்தது. செல்வம் குவியத் தொடங்கியது. வந்த இலாபத்தில் பாதியை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டார். மீதியை அரங்கன் கணக்காக நினைத்து தர்ம காரியங்களுக்குச் செலவு செய்தார். அவரும், அரங்கனும் சேர்ந்த கூட்டணி அவரை மலைக்க வைக்கும் உயரத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அவர் பழையதை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் நவம்பர் இருபதாம் தேதி வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதில் தவறவில்லை. இலாபத்தில் அரங்கனுடைய பங்கை எப்படி எல்லாம் செலவு செய்திருக்கிறார் என்று நேரடியாக வந்து கணக்கை ஒப்புவிக்கத் தவறவில்லை....

காலத்தை மறந்து அரங்கனுடன் இருந்த அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக வானம் இரைச்சலுடன் பொழிய ஆரம்பித்தது. யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. ஓடி வந்த மனிதருக்கு அறுபதுக்கும் மேற்பட்ட வயதிருக்கும். சாயம் போன சட்டையும், பழைய வேட்டியும் அணிந்திருந்தார். வந்தவர் தன் மேலே போட்டிருந்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டார். அவர் மழைக்கு ஒதுங்குபவர் போல அந்த உள் மண்டபத்தில் ஒதுங்கினாரே ஒழிய அரங்கன் பக்கம் திரும்பவில்லை. அரங்கனுக்கு முதுகைக் காட்டியபடியே நின்றார்.

வெங்கடேசனுக்கு அரங்கனுடன் இருந்த அந்த இனிமையான தனிமை பறி போனதால் அந்த மனிதர் வரவை ரசிக்க முடியவில்லை. கோயிலில் யாரும் வரலாம், அரங்கனுக்கு அனைவரும் ஒன்று தானே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவராக கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வது போல பாவனை செய்தார். ஆனாலும் மனம் அந்த பாவனையில் ஒன்றவில்லை. மழையுடன் இடி மின்னலும் சேர்ந்து கொண்டது. கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து இருக்க முடியாமல் சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தார்.

அந்த முதியவர் அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். வெங்கடேசன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தவர் போல உடனே கேட்டார். “நீங்கள் வெங்கடேசன் தானே?”

வெங்கடேசன் பலவந்தமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினார்.

முதியவர் முகத்தில் மிகுந்த மரியாதை தெரிந்தது. “உங்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய படித்திருக்கிறேன். அனாதை ஆசிரமங்கள், இலவச முதியோர் இல்லங்கள், ஏழைகள் படிப்புக்கு உதவித்தொகை என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறீர்கள். ரொம்ப பெரிய மனது உங்களுக்கு....”

வெங்கடேசனுக்கு கூச்சமாய் இருந்தது. அடக்கத்துடன் அரங்கனைக் காண்பித்துச் சொன்னார். “எல்லாம் அவன் போட்ட பிச்சை. நானாகச் செய்தது எதுவுமில்லை”

முதியவர் பார்வை அப்போதும் அரங்கன் பக்கம் போகவில்லை. அந்த உள் மண்டபத்தில் பதித்திருந்த “உபயம்- வெங்கடேசன்” என்ற வாசகத்தின் மீது அவர் பார்வை தங்கியது. ”இந்த மண்டபம் கூட நீங்கள் தான் கட்டியது. இல்லையா. ஒரு காலத்தில் இப்படி இருக்கவில்லை...”

வெங்கடேசன் சங்கோஜத்துடன் தலையசைத்தார். பின் தயக்கத்துடன் சொன்னார். “எல்லாம் அவன் கொடுத்தது. அவன் கொடுத்ததிலேயே இதைக் கட்டி விட்டு உபயம் என்று என் பெயரைப் போட்டது சரியல்ல. ஆனால் நான் சொன்னாலும் கேட்காமல் போட்டு விட்டார்கள்.”

முதியவர் முகத்தில் தெரிந்த மரியாதை கூடியது. “உங்களை மாதிரி ஒரு நல்ல மனிதரை நேரில் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது”.  சொல்லி விட்டு அவர் கை கூப்பினார். பின் சினேகத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் ராமமூர்த்தி. பக்கத்து ஊரில் தான் இருக்கிறேன். அங்கே ஒரு தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராய் இருக்கிறேன்.”

வெங்கடேசனும் கை கூப்பினார். “நீங்கள் அதிர்ஷ்டசாலி. பக்கத்து ஊரிலேயே இருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் வந்து அரங்கனை தரிசிக்கலாம்.”

முதியவர் முகம் சுருங்கியது. மெல்லச் சொன்னார். ”நான் இந்த இடத்திற்கு வந்து பத்து வருஷமாகி விட்டது”

அரங்கன் சன்னிதியைக் கோயில் என்று சொல்லாமல் இந்த இடம் என்று அவர் சொன்னதும் சொன்ன விதமும் வெங்கடேசனை நிறையவே பாதித்தது.

அவர் முகபாவனையிலேயே அதைப் புரிந்து கொண்ட ராமமூர்த்தி குரலை சற்று மென்மையாக்கிக் கொண்டு சொன்னார். ”உங்களுக்கு இவன் இறைவனாய் இருக்கலாம். நல்லது நிறைய செய்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரை இவன் திருடன். தண்டிக்க முடியாத திருடன். முதலில் எல்லாம் நான் இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் தான். என் தாத்தா, அப்பா, நான் என்று எல்லாரும் வம்சாவளியாக இங்கே வந்து வணங்கியவர்கள் தான். ஆனால் பத்து வருஷமாய் தான் நான் வணங்குவதை நிறுத்தி விட்டேன். இப்போது கூட வந்திருக்க மாட்டேன்.  வேறொரு வேலையாக இந்த ஊருக்கு வந்தேன். வேலையை முடித்துக் கொண்டு போகிற நேரத்தில் இப்படி மழை பிடித்துக் கொண்டது. பக்கத்தில் ஒதுங்க எந்த கட்டிடமும் இல்லை. அதனால் தான் என்னை அறியாமல் பழைய பழக்க தோஷத்தில் இங்கே வந்து விட்டேன்...”

வெங்கடேசன் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அரங்கன் சன்னிதியில் நின்று கொண்டு அரங்கனையே பழித்துப் பேசும் அந்த முதியவரின் செயல் அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. கோபத்தை பேச்சில் காண்பிக்கக் கூடாது என்று எண்ணியவராக இயல்பான குரலில் கேட்டார். ”அப்படி என்ன தான் அரங்கன் செய்து விட்டான்?”

ராமமூர்த்தி உடனடியாக பதில் சொல்லவில்லை. அரங்கனைப் பார்க்கவும் பிடிக்காதவராய் பெய்கின்ற மழையையே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “மாளிகையில் இருந்த என்னை ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டான்....”

வெங்கடேசன் திகைப்போடு அவரைப் பார்த்தார்.

மழை குறைகிற மாதிரி தெரியவில்லை. ஆக்ரோஷத்துடன் பெய்து கொண்டிருந்தது. ராமமூர்த்தி பெய்யும் மழையைப் பார்த்தபடியே தளர்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தார். “ஒரு காலத்தில் பம்பாயில் நல்ல விதமாய் வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன். நான், என் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தோம். மூத்த மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் செய்து முடித்திருந்தேன். கடைசி மகன், மகள் பிறந்து பத்து வருடம் கழிந்து பிறந்தவன். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பம்பாயில் தொழில் மந்தமாக ஆரம்பித்தது. கலவரங்களும் அதிகமாக இருந்தன. அந்தத் தொழிலை விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கே வந்து புதிதாக தொழில் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் வந்தது. தமிழ்நாட்டில் மனை விற்பனை  நன்றாகப் போகிறது, அதில் பணம் போட்டால் நல்ல இலாபம் வரும் என்று இங்கிருந்த சிலர் ஆலோசனை சொன்னார்கள். எல்லாவற்றையும் விற்று விட்டு பணத்தோடு தமிழ்நாட்டிற்கே வந்து அப்படி தொழில் ஆரம்பித்து விடலாமா என்று இங்கே வந்து குல தெய்வமான இந்த அரங்கனிடம் பூப் போட்டு உத்தரவு கேட்ட போது செய் என்று பதில் வந்தது. மலிவான விலையில் நல்ல இடத்தில் வீடு கட்டி விற்க பன்னிரண்டு ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருந்தது. விற்பவன் கணக்கில் குறைவாகத் தான் காண்பிப்பேன், பெரும்பகுதியை ரொக்கமாகத் தான் தரவேண்டும் என்று சொன்னான். அப்படியே பணத்தையும், போதாதற்கு இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு, இதே நவம்பர் மாதம் இதே இருபதாம் தேதி இவனை வணங்கி விட்டு வியாபாரம் முடிப்பதற்காக, முதலில் இதே இடத்திற்கு வந்தேன்.....”

வெங்கடேசன் இதயத்தை ஏதோ கனமாக அழுத்தியது போல உணர்ந்தார்.

அதைக் கவனிக்காமல் மழையிலும் கடந்த காலத்திலும் லயித்தபடி ராமமூர்த்தி தொடர்ந்து சொன்னார். “வந்த நேரம் கூட கிட்டத்தட்ட இதே நேரம் தான். சாயங்காலம் பூசாரி வந்து தீபாராதனை காட்டுகிற வரை காத்திருக்க நேரம் இல்லை. அதனால் வணங்கி விட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய பையின் உள்ளே துணிமணியோடு பணம் நகை வைத்த சிறிய சிவப்புப்பை பாதுகாப்பாய் வைத்திருந்தேன். அதை எடுத்து இவன் முன்னால் வைத்துக் கும்பிட்டேன். பின் அதை எடுத்தவன் உள்ளே வைக்க எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. பெரிய பையில் அதை எடுத்து வைத்து விட்டதாய் நினைத்து கிளம்பி விட்டேன். நிலம் விற்பவனிடம் போன பிறகு தான் அந்தப் பையை இங்கேயே விட்டு விட்டதைக் கண்டு பிடித்தேன். உடனடியாகத் திரும்பி இங்கே ஓடோடி வந்தேன். அரங்கன் முன் வைத்த பணம் அவன் கண்காணிப்பில் பத்திரமாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால்.... ஆனால் .....இங்கே வந்த போது அந்தப் பை மாயமாய் மறைந்திருந்தது.....”

வெங்கடேசன் இதயத்தை அழுத்த ஆரம்பித்த கனம் இமயமாக மாறியது. சரியாக மூச்சு விடக்கூட அவரால் முடியவில்லை.

ராமமூர்த்தி குரல் கரகரக்க ஆரம்பித்தது. “பணம் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. பணம் போனதோடு எல்லாம் போகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படித் தான் ஆனது. மூத்த மகன், மகள் பெயரில் நான் சேர்த்து வைத்திருந்த சொத்துகளைத் தவிர எல்லாவற்றையும் இந்த வியாபாரத்திற்காக நான் விற்றிருந்தேன். அதனால் நிலைமையை சரிக்கட்ட அவர்கள் பெயரில் இருந்த சொத்து எனக்கு தேவைப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளே அப்படி செய்வார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற உறவுகளும், நட்பும் கூட அப்படியே உதிர்ந்து போய் விட்டது. நானும், என் மனைவியும், என் சின்ன மகனும் நடுத்தெருவில் நின்றோம்...... நான் செய்த ஒரே தவறு இவனை வணங்க இங்கே வந்தது தான். இவன் முன்னால் நான் விட்டுப் போன என் பணத்தை எனக்குக் காப்பாற்றித் தரத் தெரியாதவன் இந்த உலகத்தையே காப்பாற்றுவானாம்.....” சொல்லி விட்டு ராமமூர்த்தி ஏளனமாகச் சிரித்தார்.

வெங்கடேசன் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதனை குடும்பத்தோடு நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விட்டுத் தான் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி விட்டிருக்கிறார்... அந்த அப்பாவி மனிதரின் அழிவில் தான் இன்று பெரியதாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.... அந்த உள் மண்டபத்தின் சுவரில் இருந்த “உபயம்-வெங்கடேசன்” என்ற வாசகம் அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்தது. இத்தனை காலம் கணக்கு ஒப்பித்தவர் இந்தக் கணக்கை எங்கே சொல்ல முடியும்? என்ன கணக்கு இது? இது பாவக்கணக்கே அல்லவா?

வெங்கடேசனைப் பார்த்த போது ஏதோ ஒரு விபரீதம் நடப்பது ராமமூர்த்திக்கு விளங்கியது. அவர் முகத்தில் தெரிந்த பெரும் வலியைக் கண்டு ராமமூர்த்தி பயந்து போனார். வெங்கடேசனுக்கு மாரடைப்பு வந்து விட்டதா என்ற சந்தேகம் வலுக்க வேகமாக அவர் அருகே வந்து கேட்டார். “என்ன ஆயிற்று உங்களுக்கு? உடம்பு சரியில்லையா?”

சொல்லப் போவதை கேட்டு விட்டால் இந்தக் கருணை அந்த மனிதரிடம் இருந்து பறந்து போகும் என்பதில் வெங்கடேசனுக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அரங்கன் முன்னால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்த அந்த பாவக்கணக்கு அவன் சன்னிதியில் அவன் முன்னிலையில் இன்று தீர்க்கப் பட வேண்டும் என்பதில் வெங்கடேசன் உறுதியாக இருந்தார். அந்தப் பணத்தை யாராவது தவறுதலாக விட்டுப் போயிருக்கக் கூடும் என்ற அறிவுபூர்வமான எண்ணம் தோன்றாததற்குக் காரணம் தன்னுடைய அப்போதைய சுயநலம் என்று இன்று விளங்கியது. யாரோ வேண்டுமென்றே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தது அப்போதைய நிலைமைக்கு வசதியாக இருந்ததாக இப்போது உணர்ந்தார். ஆனால் பிழைக்க வழி கிடைத்தது என்று அன்று நினைத்தாரே ஒழிய ஒருவர் பிழைப்பில் மண்ணைப் போடுவோம் என்று நினைத்திருக்கவில்லை.  அப்படியே குனிந்து அந்த மனிதரின் கால்களை கெட்டியாகத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.

ராமமூர்த்தி பதறிப் போனார். “ஐயோ, என்ன இது.” என்று கால்களைப் பின்னுக்கு இழுக்க முயற்சி செய்தார். ஆனால் வெங்கடேசன் அவர் கால்களை விடுவதாய் இல்லை. ”இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள் ஐயா. என்னை மன்னித்து விடுங்கள்....”

ராமமூர்த்தி குழப்பத்துடனும், தர்மசங்கடத்துடனும் கேட்டார். “எதற்கு?”

ராமமூர்த்தியின் கால்களைப் பிடித்தபடியே வெங்கடேசன் பத்து வருடத்திற்கு முந்தைய நவம்பர் இருபதில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே பெய்த மழையை ஒன்றுமில்லாததாக்கியது வெங்கடேசனின் கண்ணீர். ஒன்றையும் மறைக்காமல் வெங்கடேசன் சொன்னதைப் பேச்சிழந்து கேட்டுக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி.

கடைசியில் வெங்கடேசன் கதறிபடி சொன்னார். “ஐயா எல்லாத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன். நீங்கள் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பத்து வருஷத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு மட்டும் பரிகாரம் என்னால் செய்ய முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்....” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரால் ராமமூர்த்தியின் கால்களைக் கழுவியபடியே அவர் கூனிக் குறுகியிருந்தார்.

ராமமூர்த்தியின் பார்வை முதல் முறையாக அரங்கன் பக்கம் திரும்பியது. அரங்கனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அவர் மனதில் ஏராளமான எண்ணங்களும் உணர்வுகளும் அலை மோதின. அவர் நீண்ட நேரம் பேசவில்லை. ஒரு கனத்த மௌனம் அங்கே நிலவியது.

அவர் ஒன்றும் சொல்லாதது வெங்கடேசனை மேலும் துக்கப்படுத்தியது. அவர் சொன்னார். “ஐயா எதாவது சொல்லுங்கள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். அரங்கனைத் திட்டாதீர்கள்.... எல்லாத் தவறும் என்னுடையது. என்னோட வடிகட்டிய சுயநலம் தான் இதற்கெல்லாம் காரணம். இப்போதே நீங்கள் என் கூட வந்தால் நான் இது வரை சம்பாதித்ததை எல்லாம் அப்படியே திருப்பித் தந்து விடுகிறேன். சரி என்று சொல்லி ஏற்றுக் கொண்டு இந்தப் பாவியைத் தயவு செய்து மன்னியுங்கள் ஐயா....”

அரங்கனைப் பார்த்தபடியே சிலையாக நின்றிருந்த ராமமூர்த்தி அப்போதும் ஒன்றும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனையில் அவர் மூழ்கி இருந்தார்.

வெங்கடேசனுக்கு அவர் ஏதாவது சொல்லா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. ”என்ன ஐயா யோசிக்கிறீர்கள்? இந்தப் பாவி மன்னிப்புக்கும் ஏற்றவன் இல்லை என்றா?”

ராம்மூர்த்தி மெல்ல வெங்கடேசன் பக்கம் திரும்பினார். இரு கைகளாலும் அவரைப் பிடித்து எழுப்பினார். “நீங்கள் ஏன் இந்த மாதிரி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள்? நடந்ததை

இப்போது இன்னொரு தடவை யோசித்துப் பார்த்தால் எனக்கு உங்களையோ, அரங்கனையோ தப்பு சொல்லத் தோன்றவில்லை”

வெங்கடேசன் திகைத்துப் போனார். “ஐயா என்ன சொல்கிறீர்கள்?”

“அந்தப்பணம் என்னிடமே இருந்திருந்தால் உங்களை மாதிரி இத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்த அளவு பெரிய மனம் எனக்கு இருந்ததில்லை. உங்களிடம் அந்தப்பணம் வந்ததால் தான் இத்தனை நல்ல காரியம் நடந்திருக்கிறது. அதனால் தான் அரங்கன் அந்தப் பணத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். ஒருவிதத்தில் அந்தப் பணம் என் கையை விட்டுப் போனதும் நல்லது தான் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது வெங்கடேசன். பணத்துக்காக ஒட்டியிருந்த உறவுகளும், நட்புகளும் அந்தப் பணத்துடனேயே போய் உண்மையான உறவுகளும், நட்புகளும் மட்டுமே என் வாழ்க்கையில் மிஞ்சினது ஒரு விதத்தில் யோசித்தால் அருமையான நிகழ்வு இல்லையா? இல்லாவிட்டால் நான் போலிகளை எல்லாம் நிஜம் என்று கடைசி வரை ஏமாந்து போயிருப்பேன். அந்த வகையில் அரங்கன் எனக்கு உதவி தான் செய்திருக்கான். இது தாண்டா நிஜம். நிஜத்தை மட்டுமே கொண்டாடு என்று காட்டியிருக்கிறான்....”

“ஐயா...” வெங்கடேசன் திகைத்தார்.

ராமமூர்த்தி கனிவாகச் சொன்னார். “உங்களை சமாதானப்படுத்த நான் சொல்லவில்லை. இப்போது யோசித்தால் என் வாழ்க்கையில் செல்வம் தான் போனதே ஒழிய மற்றபடி இவன் அருளில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க எனக்கு ஒரு வேலை கிடைத்தது. பணம் இல்லாததால் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடைசி மகன் நன்றாகப் படித்தான். அவனுக்கு பேங்கில் ஒரு வேலை கிடைத்து இப்போது அவன் என்னையும் என் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறான். என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று தான் சொல்கிறான். நான் தான் சும்மா இருக்க முடியாமல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம் இப்போது பணம் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையைக் கௌரவமாக ஓட்டத்தேவையான அளவு பணம் இருக்கிறது. முக்கியமாக நிம்மதி இருக்கிறது.. நிம்மதிக்கு மேல் என்ன வேண்டும். சொல்லுங்கள்.”

வெங்கடேசன் அந்த வார்த்தைகளில் மேலும் நொறுங்கினார். இத்தனை நல்ல மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது திருட்டுக்கு அல்லவா சமானம் என்று தோன்றியது. “ஐயா இந்த திருடனுக்கு பரிவாகப் பேசுகிறீர்களே. என் பாவக் கணக்கை நான் எங்கே போய் சொல்வேன்....” என்று உடைந்த குரலில் கதறினார்.

ராமமூர்த்தி அந்த நல்ல மனிதரை அணைத்துக் கொண்டார். “வெங்கடேசன். இது பாவக்கணக்கு அல்ல. இது அரங்கன் கணக்கு. அவன் சரியான கணக்கு தான் போட்டிருக்கிறான். என்னிடம் இருந்து பணத்தை எடுத்து அரங்கன் எனக்கு நல்லதைச் செய்திருக்கிறான். அந்தப் பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லதைச் செய்திருக்கிறான். நான் தான் இத்தனை நாள் இது புரியாமல் இவன் மேல் கோபமாய் இருந்திருக்கிறேன்....”

“நீங்கள் என்னை சபிக்காமல் இந்த அளவு பெருந்தன்மை காட்டினதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நீங்கள் நிஜமாகவே பெரிய மனிதர். நீங்கள் இப்போதே என் கூட வந்தால் நான் அத்தனையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவேன். என் ஆடிட்டரிடம் பேசி முறைப்படி செய்து விடலாம்...” வெங்கடேசன் ஆத்மார்த்தமாகச் சொன்னார்.

“நான் தான் கணக்கு சரியாகத் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேனே. பணம் திரும்பி வந்தது தெரிந்தால் உதிர்ந்த உறவுகளும், நட்புகளும் வெட்கமே இல்லாமல் திரும்பி வந்து ஒட்டிக் கொள்ளும். என் மனைவிக்கு இளகின மனம். நான் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவள் ஏற்றுக் கொள்வாள். நானும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பணம் இனி எனக்கு நல்லது செய்வதை விட கெட்டது தான் அதிகம் செய்யும்.... ” ராமமூர்த்தி புன்னகையோடு சொன்னார்.

வெங்கடேசன் திகைப்புடனும், விவரிக்க முடியாத பிரமிப்போடும் ராமமூர்த்தியைப் பார்த்தார். ராமமூர்த்தி அவரிடம் நிறைந்த மனதுடன் தொடர்ந்து சொன்னார். “அரங்கன் அருளால் உங்கள் வியாபாரம் இனியும் தொடர்ந்து நன்றாய் நடக்கட்டும். உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து  இதே மாதிரி நல்லதை நிறைய செய்யுங்கள். உங்கள் கணக்கை அரங்கனிடம் எப்போதும் போல் ஒப்புவியுங்கள். 

*இந்த விஷயம் நம் மூன்று பேருக்குள்ளேயே இருக்கட்டும்.* வெளியே யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை....”

வெங்கடேசனிடம் சொல்லி விட்டுத் தெளிந்த மனத்துடன் பத்து வருடங்கள் கழித்து அரங்கனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி.  சொல்ல வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் சிலையாக நின்றிருந்தார் வெங்கடேசன். மௌன சாட்சியாய் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் தன் இரு பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.....
🙏🙏🙏🙏🙏
கண்கலங்கும் பதிவு
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம்
---

பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில், 
குருவாயூரப்பனுக்கு தினமும் அர்த்த ஜாம 
பூஜை முடிந்த பிறகு பிரகாரத்தில் "நிர்த்தம்"
எனுமிடத்தில் வாரியார் ஒருவர், ஓலையில் 
எழுதிய அன்றாட வரவு-செலவு கணக்குகளை
வாசித்து, பகவானிடம் ஒப்புவிக்கும் வழக்கம் 
உண்டு.   இந்த நிகழ்ச்சிக்கு 'திருத்தோலை
வாசித்தல்" என்று பெயர்.  மேலும் இத்தலத்தில்
சொறி, சிரங்கு ஏற்பட்டவர்கள் எடைக்கு எடை 
சேனைக்கிழங்கை காணிக்கையாகச் செலுத்தும் 
வழக்கமும் இந்த கோவிலில் பிரசித்தம்.   அவ்வாறு
செலுத்தினால் வியாதி குணமாகும் என்ற நம்பிக்கை
பக்தர்களிடத்தில் உண்டு.   உடல் சரியானவுடன்
வேண்டுதல் நிறைவேற்றி குருவாயூரப்பனுக்கு
நன்றிக்கடன் செய்கின்றனர்.   இங்கு குவிந்துள்ள
காணிக்கையே இதற்கு சாட்சி.   இந்த கோவிலில் 
நடக்கும் நான்கு பூஜைகளுக்கும் விதவிதமான 
நைவேத்தியங்கள் உண்டு.   மோர்குழம்பு, பால் பாயசம்,
நெய் பாயசம், தயிர், நெல்பொரி, இலையடை, நெய்யப்பம் 
முதலியன நம் அப்பனுக்கு அளிக்கப்படுகிறது

குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்.

---

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கஜினி முஹமதுவின் அடிமைகளால் இடிக்கப்பட்ட குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் சோமநாதர் மறைந்து விட்டாரா ? அழிந்து விட்டாரா  ? 

முட்டாள் கஜினியே அழிந்தது நீயே.... மீண்டும் எழுந்தான் சோமநாதன் கம்பீரமாய்..! 

ஔரங்கசீப் மதுராவை இடித்து மசூதி கட்டினான். கிருஷ்ண லாலா காணாமல் போய்விட்டாரா...?? நீ தான் அழிந்து விட்டாய். கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்..! 

காசி விஸ்வநாதர் கோயிலையும் இடித்து மசூதி கட்டினான். விஸ்வநாதர் தொலையவில்லை; அழியவில்லை. அழிந்தது நீதான் ஔரங்கசீப்பே..! 

பூனாவின் பவானி கோயிலை இடித்த ஔரங்கசீப்பின் கண்முன்னேயே வானுயர எழுந்தாள் அன்னை பவானி..!! 

ஸ்ரீசைலம் கோயிலை இடிக்க வந்தவனை தானழித்து நிமிர்ந்து நிற்கின்றார் மல்லிகார்ஜுனர்..! 

ஹம்பி, மேலக்கோட்டை, பேலூரை இடிக்க வந்த பீஜப்பூர் சுல்தான் தானழிந்தான். அவை இன்றும் ஓங்கி நிற்கிறது..! 

தளிபரம்பாவை சின்னாபின்னம் ஆக்கினான் ஹைதரும், திப்புவும். இருவரும் இன்று இல்லை. உலகையே ஈர்த்து வருகிறாள் அன்னை ராஜராஜேஸ்வரி..!! 

மலைநாட்டு மலப்புரத்தின் திருநாவாய் நவமுகுந்தன் கோயிலையும் இடித்தான் திப்பு. ஆனால் இன்று திப்பு இல்லை.108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாவாய் நவமுகுந்தன் மலைமீது ஜொலித்துக் கொண்டிருக்கின்றான்..!! 

குருவாயூர் கிருஷ்ணனை அழிக்க வந்தான் திப்பு. தப்பாமல் அவனும் மறைந்து போனான். அம்பலப் புழையில் பக்தர்களால் பாதுகாத்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குருவாயூருக்கு குதித்து வந்தான் பார்த்தசாரதி..! 

வேலூரின் ஜலகண்டேசரை இடித்தவன் காணாமல் போனான். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சத்துவாச்சாரி கிணற்றிலிருந்து கலெக்டர் கங்கப்பாவால் கிளர்ந்தெழுந்தார் ஜலகண்டேஸ்வர்..! 

காஞ்சியிலே வைகுண்டபெருமாளின் கோபுரத்தை இடித்தான் ஆற்காட்டு நவாப். இடித்தவன் இறந்து போனான். இன்றும் வைகுண்டநாதன் வையத்தைக் காத்து நிற்கின்றார்..! 

ஸ்ரீரங்கம் கோயிலையும் தாக்கினான் அலாவுதீனின் அடிமை அலி மாலிக்காபூர். மாலிக் மாண்டு போனான். ரங்கநாதன் ரம்யமாய் காணக் கிடைக்கின்றார்..! 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாற்பது ஆண்டுகள் பூஜையின்றி பூட்டப்பட்டு இருந்தும் மீனாட்சியும் சொக்கநாதனும் அழிந்தா போனார்கள்..??

மீண்டும் உலகமே திரண்டு வர இன்றும் மீனாட்சியின் அருள் பொற்றாமரைக் குளத்தில் பொங்கி வருகிறது..!! 

இத்தனை வரலாற்றையும் கண்ட பின்னும் தமிழகத்தில் கோயிலை அழிக்க நினைத்த அந்நிய அடிமைகளான அயோக்கிய சித்தாந்திகள் அழிந்துதான் போனார்கள்..!! 

இத்தனைக்குப் பிறகும் இப்போது சில கருகுரங்கின் வால் ஆடிக்கொண்டு இருக்கிறது. 

நாளை இதன் கதி..?

நம் குழந்தைகளுக்கு பிறர் அதர்மத்தை போதிப்பதற்கு முன்பு நம் சனாதன தர்மத்தையும் அதன் மேன்மைகளையும் போதிப்போம்...! ஜெய்ஹிந்த்.....
---

ஓம் நமோ நாராயணா 

ஸ்ரீராமானுஜர் திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார்.

🌼அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

🌼தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்றுஉ கொண்டிருந்தாள்.

🌼சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

🌼ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர்
ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள்.

🌼ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும்
என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும்.

🌼இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள்.

🌼ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

🌼ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர்.

🌼மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து
முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி. கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது.
நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள்.

🌼அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது.
அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

🌼திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின்
பார்வை விசேஷம் அப்படிப்பட்டது.

🌼அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

🌼அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று
கேட்டார் ராமானுஜர்.

🌼மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள்.

🌼ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது.

🌼ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள்.

🌼பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்…
அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள்.

🌼அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா?
என்று கேட்டார் சீடர் ஒருவர்.

🌼ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

🌼ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

🌼ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

🌼ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான்
கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.

🌼ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார்.

🌼“அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை.

 🌼மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார்.

🌼இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற
வழியாக இல்லை.

🌼“சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

🌼“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல
படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர்.

🌼“இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.

🌼இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர்.

🌼மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள்.

🌼“சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

🌼இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார்.

🌼அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர்.

🌼நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள்.

🌼மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார். பின்னே… ஒரு கடிதம் என்றால்,
அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே!

🌼அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

🌼அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர்.

🌼‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது.

🌼ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள்.

🌼மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள்.

🌼மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள்.

🌼அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

🌼ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின்
முன்னால் நீட்டினர். 

🌼எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?! 

🌼தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய்
மலர்ந்தார்.

🌼அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர்.

🌼ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?

🌼உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது!

🌼தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும்.
---
#மகாபாரதம்

"அஸ்வத்தாமன் விட்ட பிரம்மாஸ்திரத்தால் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த கரு கருகி விட்டது. பாண்டவர்களின் ஒரே குல வாரிசும் கருகி வெறும் கரித்துண்டமாகி விட்டது. வாரிசுகளே இல்லாமல் பாண்டவர்களை நடை பிணமாக்கி விட்டான் அஸ்வத்தாமன். போரில் தோற்று வாழ்க்கையில் வென்று விட்டான் துரியன். நாமோ போரில் வென்று வாழ்வில் தோற்று விட்டோம். இருந்த ஒரு வாரிசையும் இழந்து விட்டோம்.! இனி என்ன செய்வது கிருஷ்ணா..?"

"அழுது புலம்பாதே தர்மா.!
இனி ஆக வேண்டிய காரியத்தை பார்..!"

"இனி என்ன செய்வது.? சிதையில் வைத்து எரிக்கும் வேலை கூட மீதமாகி விட்டதே..?"

"கலங்காதே தர்மா.! இந்த பிண்டத்தை உயிரூட்ட ஒரே ஒரு வழி இருக்கிறது..!"

"என்னவென்று சொல், உடனே செய்கிறேன்."

"நைஷ்டிக பிரம்மசாரி ஒருவன் இந்த பிண்டத்தை தொட்டால் இது உயிர் பெறும் என்று நான் நினைக்கிறேன்..!"

"நீ நினைப்பதை நான் நடத்தி காட்டுகிறேன். பீமா.! அர்ஜீனா.! இருவரும் தேரில் ஏறுங்கள். ரிஷிகளையும், முனிவர்களையும் இங்கே அழைத்து வாருங்கள். பாண்டவர் குலம் எவர் கை பட்டு தழைக்கிறது என்பதை உலகம் பார்க்கட்டும்..!"

"அண்ணா.! நீங்கள் சொன்னபடி அனைவரையும் அழைத்து வந்து விட்டோம். அனைவருமே அந்த கரிபிண்டத்தை தீண்டி விட்டார்கள். அது உயிர்பெறவேயில்லை. இனி என்ன செய்வது..?"

"நான் வேண்டுமானால் அந்த பிண்டத்தை ஒரு முறை தீண்டி பார்க்கவா..?"

"கிருஷ்ணா.! நீயா அதை தீண்ட போகிறாய்..? நீ பெண்களோடு கூடி குலாவியவன், ஒழுக்கமற்ற நடத்தை கொண்டவன், ஸ்திரி லோலன். உனக்கும் பிரம்மசரியத்திற்கும் என்ன சம்மந்தம்..?"

"எதுவுமில்லைதான், ஆனாலும் தொட்டு பார்ப்பதால் எதுவும் குறைந்து விட போவதில்லையே..?"

"ஆசைப்படுகிறாய், தொட்டு பார். பிரம்மசரியத்தை வாழ்க்கை நெறியாக கொண்ட எங்களின் கை பட்டே அந்த பிண்டம் உயிர் பெறவில்லை, பெண் பித்தனான உன் கை பட்டா உயிர் வர போகிறது..?"

"தொடுவதால் யாருக்கு  நஷ்டம்.?"

"இதென்ன ஆச்சரியம்.? கிருஷ்ணனின் கை பட்டதும் பிண்டத்திற்கு உயிர் வந்து விட்டதே.? நீ பிரம்மசாரியா என்ன..?"

"ஆம்.! நான் நித்ய பிரம்மசாரி..! என்னை பெண்கள் விரும்பினார்கள். ஆனால் நான் யாரையும் விரும்பியதில்லை. பெண்களோடு இருந்தேன், பெண்களோடு விளையாடினேன். ஆனால் மனதில் மாசு மருவற்ற எண்ணத்தோடு இருந்தேன். ரிஷிகளான நீங்கள் பெண்களை பார்த்த போதெல்லாம் காம மோகத்தில் விழுந்து பாதை மாறினீர்கள். நானோ சதா சர்வ காலமும் பெண்கள் புடைசூழ இருந்த போதும் தாமரை இலை தண்ணீராக என் பிரம்மசரியத்தை கை விடாதிருந்தேன். ஸ்தித ப்ரஞ்சன் நான். கெட்டவர் நடுவே நல்லவனாக இருப்பதே கடினம். அதனால் பிரம்மசரியத்தில் உங்களை விட நானே உயர்ந்தவன். அதனால்தான் என் கை பட்டதும் பரிட்சித்துவிற்கு உயிர் வந்தது. என்னை பெண் பித்தன், ஸ்திரி லோலன் என்று பழித்தவர்கள் இப்போதாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..!"

"உன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டோம், எங்களை மன்னித்து விடு..!"

"உண்மையை சொல்ல எனக்கு கிடைத்த ஒரே சந்தர்ப்பம் இது. அதைத்தான் நான் பயன்படுத்தி கொண்டேன். இந்த பரிட்சித்து ராஜனின் வழியே பாண்டவர் குலம் தழைத்து ஓங்கட்டும். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!"

---
காசி:

வெறும் 2700 சதுர அடி பரப்பில்0 சுருக்கப்பட்டிருந்த காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது 5 லட்சம் சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது

கோவிலின் விரிவாக்கத்தின் போது பல சிறிய கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இந்த சிறிய கோவில்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.  காசி விஸ்வநாதர் தரிசனம் முடிந்த பிறகு இந்த கோவில்களையும் நம்மால் காண இயலும்.

முகலாயர்களின் படையெடுப்பின் போது சீரழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது பழைய முக்கியத்துவத்தை பெறுகிறது.  இந்த பிரம்மாண்டமான ஆலயம் டிசம்பர் மாதம் 13ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சாதுக்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்படும்.  இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் கோவில்களில் இருந்து அர்ச்சகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.






கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஒரு மாத காலத்திற்கு கோவிலில் உற்சவங்கள் நடக்கும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.  சாதுக்களின் மாநாடு ஒன்றும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் விரிவாக்கத்திற்காக சுமார் 400 வீடுகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டன.

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தற்போது இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவுக்கு பெரியதாக இருக்கும்.

600 கோடி ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்படும் இந்த ஆலயத்தில், பக்தர்கள் தங்கும் வசதியும் மருத்துவமனை ஆகிய வசதிகளும் உள்ளன.

இனி ஆலயத்தில் இருந்து நேரடியாக கங்கை நதிக்கு செல்ல இயலும்.  கங்கா ஸ்நானம் முடிந்தபிறகு அங்கிருந்தே ஆலயத்தை பக்தர்கள் தரிசிக்க இயலும்.  

வருடத்திற்கு ஏழு கோடி பக்தர்கள் விஸ்வநாதரை தரிசிக்க காசி வருகிறார்கள்.  இப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விட்டதால் அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயத்தில் இருந்து நம்மால் கங்கா நதியை இப்போது நன்றாகப் பார்க்க இயலும்.

காசி விஸ்வநாதருக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் நேரடியாக கங்கா நதியில் கலக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

---

தியானம் என்றால் என்ன?

 சிறுவனுக்கு உணர்த்திய ரமண மகரிஷியின் அற்புதமான வழிமுறை !!!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்....  

அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை...

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்....

#தியானம்_என்றால்_என்ன?

சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்....சிறுவனிடம் "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்...

அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே....

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.... 
சுற்றி உள்ளோருக்குக் குழப்பம்....

சிறுவன் மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்....

சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்....

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.....

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை....

தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது.....

சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி  எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்....

சுற்றி உள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்..... 

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்....

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்  அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்....

புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.....

ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும் சாவும் எனவும்,இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது.....

ஸ்ரீ ரமணாய நமஹ !

---

செய்த பாவத்திற்கு பரிஹாரம் இல்லை என்று பெரியோர், சான்றோர் கூறக் கேட்டிருப்போம்.

கீழ் கண்ட கதையை படித்தால், காரணம் என்ன என்று நமக்கு புலப்படும்..  
           
#கர்மாவின்_கதை:-

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்.! 

யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! 

பின் சித்திரக்குப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார்.! சித்திரக்குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்பட்டும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார்.

தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்? நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! 

சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.

இருவரும் நடந்து வரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

“இது என்ன... கற்பாறை?”

ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’

சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’

பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான்.

அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது.

விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும் போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை, என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார்.
யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர்.  #சிலா என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், #சிலாதர் ஆனார்.

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. 

பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.!

இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.  .ஓம்நமசிவாய

---

ஒரு மிக உபயோகமான பகிர்வு.. !!யாத்திரை விரும்பிகளுக்கு..!!

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியது இந்த பதிவை முடிக்க. பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?
 இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்
திருவாமூர் – பாடலிபுத்திரம் 35
பாடலிபுத்திரம் – திருவதிகை 25
திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22
திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22
திருவதிகை – திருமாணிக்குழி 15
திருமாணிக்குழி – திருதினைநகர் 23
திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23
திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16
திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125
திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22
திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37
திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86
திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5
திருநாரையூர் – சீர்காழி 67
திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58
திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44
சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42
திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42
சிதம்பரம் – திருவேட்களம் 5
திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4
திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84
திருநாரையூர் – சீர்காழி 62
சீர்காழி – திருக்கோலக்கா 166
திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95
திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98
திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18
திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10
திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14
திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52
(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55
மயிலாடுதுறை – திருத்துருத்தி 15
திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3
திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4
எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9
திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3
திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10
திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5
திருநாகேஸ்வரம் – பழையாறை 14
பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1
திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14
திருநல்லூர் – திருக்கருகாவூர், 26
திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.
திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது
திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19
திருப்பழனம் – திங்களூர் 2
திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10
திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35
திருநல்லூர் – திருவாரூர் 49
திருவாரூர் – திருவலஞ்சுழி 47
திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13
திருகுடமுக்கு – திருநாவலூர் 108
திருநாவலூர் – திருச்சேறை 122
திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5
திருகுடவாயில் – திருநறையூர் 11
திருநறையூர் – திருவாஞ்சியம் 18
திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42
திருப்பெருவேளூர் – திருவாரூர் 49
திருவாரூர் – திருவலிவலம் 21
திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16
திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16
திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16
திருவாரூர் – திருப்புகலூர் 21
திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4
திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15
திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268
திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)
பூம்புகலூர் – திருக்கடவூர் 296
திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24
திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33
திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9
திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90
திருமறைக்காடு – திருவாய்மூர் 37
திருவாய்மூர் – திருமறைக்காடு 37
திருமறைக்காடு – திருவீழிமிழலை 93
திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47
திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62
திருவாவடுதுறை – பழையாறை 25
பழையாறை – திருவானைக்கா 87
திருவானைக்கா – திருவாலம்பொழில் 44
திருவாலம்பொழில் – திருக்கானுர் 184
திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176
திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41
திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21
மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32
திருவானைக்கா – திருவெறும்பியூர் 15
திருவெறும்பியூர் – திருச்சி 11
திருச்சி – திருப்பராய்த்துறை 16
திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192
திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178
திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232
அண்ணாமலை – திருவோத்தூர் 484
திருவோத்தூர் – காஞ்சி 30
காஞ்சி – திருமால்பேறு 22
திருமால்பேறு – காஞ்சி 22
காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52
திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52
திருவான்மியூர் – மயிலாப்பூர் 8
மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17
திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56
திருப்பாச்சூர் – பழையனூர் 15
பழையனூர் – திருவாலங்காடு 2
திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370
திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338
திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396
திருப்பருப்பதம்  கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843
திருவையாறு – திருநெய்த்தானம் 2
திருநெய்த்தானம் – திருமழபாடி 17
திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21
திருப்பூந்துருத்தி – சீர்காழி 94
சீர்காழி – திருப்புத்தூர் 210
திருப்புத்தூர் – மதுரை 65
மதுரை – திருப்பூவணம் 20
திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180
ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215
திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221
திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191
பூம்புகலூர் – திருப்புகலூர் 2
———–
மொத்த தூரம் 14,380
வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.

நன்றி .. வாழ்க வளமுடன் ..

---

சுப்ரபாதம் ஏன் பாடுறோம் என்று தெரிந்து கொள்வோம்....

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே, அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடு மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விஸ்வாமித்திரர், அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார். நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்! ம்ஹூம். இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

உடனே, 'கௌசல்யா சுப்ரஜா. கௌசல்யா சுப்ரஜா.' என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம். 
இன்று ஒருநாள், இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.

அதனால் அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்....

கோசலையின் தவ புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை! இந்த கௌசல்யா சுப்ரஜான்ற வால்மீகியின் வார்த்தையினை கொண்டே பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

அவர் எழுதிய அந்த பாடல்களே இன்னிக்கு திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் ஒலிக்கிறது. 

எல்லாம் சரி, ராமனை எழுப்பியாச்சு. லட்சுமணனும் தான் தூங்கிட்டு இருக்கான். ஏன் லட்சுமணனை எழுப்பலைன்னு இதை படிக்குறவங்களுக்கு கேள்வி எழும்பும்.

ஏனென்றால் லட்சுமணன் ஆதிசேஷன் அம்சம். விஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் எழுப்ப மாட்டாங்க. எழுப்பவும் முடியாது. அதனால் தான் லட்சுமணனை இதில் சேர்க்கலை. 

பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, 'கௌசல்யா சுப்ரஜா' என ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்?
என்ன அர்த்தம் இதற்கு?...

அதாவது, 'இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராம பிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ.' என்று ஸ்ரீராம பிரானின் புகழை மறை முகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

---

என்ன தவமும் அதிர்ஷ்டமும் செய்தது நமது தலைமுறை...

பலநூறு வருடங்களாக அவுரங்கசீப்பால் ஆக்கிரமிக்க பட்டு வெறும் 3000 சதுர அடிக்குள் சுருக்கி கோவிலுக்குள் நுழைவதற்கே முடியாத அளவுக்கு வழிகளை அடைத்து...
அந்த கோவிலின் பெருமையான கங்கா மாதாவையும் ஆக்கிரமித்து... கூவம் நதியை விட மேலாக மாற்றிவைத்திருந்த கங்கா நதியையும் மீட்டு... 
சுத்தபடுத்தி... அதில் நீர்வழி போக்குவரத்தை துவங்கி...

வெறும் 3000 அடியாக சுருக்கபட்டிருந்த காசி நகரத்தையே சுமார் 340 கோடிகள் கொடுத்து ஆக்கிரமிப்பாளர்களுடைய மனமும் புண்படா வண்ணம் அனைத்து ஆக்கிரமுப்புகளையும் விலைகொடுத்து வாங்கி...

5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தி காசி யாத்ரிகர்ளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தாகி விட்டது.

அதே போல தான் ராமர் கோவிலும்.
500 வருடங்களுக்கும் மேலான ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டு நாட்டுக்கு சமர்ப்பிக்கபட்டதும் அங்கும் ராம பிரானுக்கும் கன ஜோராக அந்த புண்யபூமியில் மிகசிறந்த ஆலயம் எழும்பி கொண்டிருப்பதும் நமது இந்த தலை முறையில் தான்.

அடுத்தது மதுரா🥰

         இதையெல்லாம் உடம்பில் ஒரு சனாதனதர்மியின் ரத்தம் ஓடுபவர்களால் மட்டுமே உணர முடியும்.
மற்றவர்களால் ஏதோ ஒன்றாக நினைத்து எழிதாக கடந்து செல்லமுடியும்.

இப்போது எனது ஆசை ஒன்றுதான்...

1) அயோத்திக்கு சென்று ராமஜென்ம பூமியிலேயே அவரை தரிசிக்கவேண்டும்.

2) காசிக்கு சென்று அந்த விஸ்வநாதரை மனம்குளிர தரிசிக்கவேண்டும்.

3) மதுராவிற்கு சென்று அந்த கண்ணபிரானின் பாதங்களையும் பற்றவேண்டும்.

                       "ஹரி'யும் ஹர'னும்" அந்த மாபெரும் பாக்கியத்தை நமது தலைமுறைக்கு கொடுக்கட்டும்.🙏

குறிப்பு : பாரத பிரதமர் மோடிஜி தெய்வத்தின் மறுபிறப்பா என்று எனக்கு தெரியாது. ஆனால் அறுதியிட்டு சொல்வேன் அவர் கடவுளின் ஆசியோடு பாரத பெருமை, பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டெடுக்க வந்த மஹாத்மா.🙏இப்பதிவ பகிர்வதில் பெருமை படுகிறேன்  நமது கலாச்சாரமும் பாரதபண்புமும்  சாண்றோா் வழி மீட்டேடுத்த 
 பாரத பிரதமர் மோடி ஜி 
 புகழ் உலகமேல்லாம் ஓங்குக
 வெற்றிவேல் வீர வேல் 
ஹர ஹர மகாதேவ 
என முழங்குவோம் போற்றி நமசிவாய
                         தென்கயிலையான் அடிமை.சிவ .கல்யாணகுமரர்

---


இன்றைய உரையில் மோடி ஏன் ராணி அகில்யபாய் ஹோல்க்ரையும், சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கையும் குறிப்பிட்டு சொன்னார் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை

வேத காலத்தில் இருந்து வழிவழியாய் இந்துக்களின் தலைநகராய் பொதுநகராய் இருந்தது காசி, பரந்துவிரிந்த பாரத கண்டத்தில் அது புண்ணியநதியான கங்கையின் ஓரத்தில் ஞானிகளாலும் ரிஷிகளாலும் அடையாளம் காணபட்ட புண்ணிய இடமாக இருந்தது

அதற்கான முதல் சவால் புத்த சமண காலத்தில் வந்தாலும் பின்னாளில் அவை முறியடிக்கபட்டன, நிஜமான ஆபத்து ஆப்கானியர் இங்கே ஆளவந்தபொழுது நடந்தது

இங்கே சில விஷயங்களை தென்னகத்தாரால் புரிந்து கொள்ள முடியாது, காரணம் ஆப்கானியர் ஆட்சியின் கருப்பு பக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் தெரியாது காரணம் நாயக்க இந்துமன்னர்கள் இங்கு வலுவாய் இருந்தார்கள்

ஆனால் வட இந்தியா அப்படி அல்ல அது 1300 முதல் 1650 வரை மிகபெரிய இக்கட்டில் இருந்தது இந்து அடையாளங்கள் இல்லாதபடி பலத்த மாற்றங்களும் அடையாள ஒழிப்பும் இருந்தன‌

காசிக்கு இதில் முதலிடம் இருந்தது

அதை மீட்க‌ கிளம்பியவன் வீரசிவாஜி அவனுக்கும் காசிக்கும் பொருத்தம் அதிகம், ஆனால் வெகு சாமான்ய குடும்பத்து சிவாஜி பிஜப்பூர் சுல்தானை அடக்கி கோல்கொண்டா சுல்தானை ஒடுங்கி அதன் பின் மொகலாயருடன் மோதி , அவனின் போராட்டமும் வீரமும் துணிச்சலும் அதிகம்

அவன் படாதபாடுபட்டு கோட்டைகளை பிடித்தும் முடிசூட்ட முடியா தடை இருந்தது, கடைசியில் அவுரங்கசீப்பிடம் இருந்து  தப்பி காசியில் தலைமறைவாக திரிந்து மராட்டியம் திரும்பியபின்புதான் சத்ரபதி என முடிசூட்டினான், ஒரு அரசனாக அங்கீகரிக்கபட்டான்

ஆம், காசிக்கு சென்றுவந்த பின்பே அவனுக்கு முழு வெற்றி கிட்டிற்று

அவன் காசியினை மீட்க கடும் பிரயத்தனம் செய்தான் ஆனால் விதி அவனுக்கு இல்லை, 50 வயதிலே அவன் மரணமடைந்தான்

அவன் மகன் சாம்பாஜியினை அரவுரங்கசீப் வீசி எறிந்தான், காசியினை அவுரங்கசீப் பலமாக மாற்றினான், வேகமான அடையாள மாற்றங்கள் நடந்தன, சிவாஜியின் கனவு வீணாக போய்விடும் அச்சம் எழுந்தது

வரலாற்றில் அது ஒரு புரட்சி, அவுரங்கசீப்பால் சிவாஜி மகனை கொல்லமுடிந்ததே தவிர சிவாஜி ஏற்றிவைத்த இந்து எழுச்சியினை அடக்க முடியவில்லை, அலை அலையாய் எழுந்து மராட்டியர் அடித்த அடியில் மொகலாய வம்சம் அசைந்தது, அவுரங்கசீப்புக்கு பின் மெல்ல சரிந்தது

இக்காலகட்டத்தில்தான் அகல்பாய் ஹோல்கர் இந்தூர் ராணியாக முடிசூடினாள், அவள் ஹோல்கர் எனும் மராட்டிய வம்சத்தின் ராணி சிவாஜி ஏற்றிவைத்த எழுச்சியில் உதித்த இந்து ராணி

அவள் கனவர் காண்டே ராவ் ஹோல்கர் 1754ல் மொகலாயருடன் போரில் இறக்க ராணி முடிசூடினாள், அதுவும் சில ஆண்டு கழித்து 1767ல் முடிசூட்டினாள்

இக்காலம் நம் கட்டபொம்மனுக்கு முந்தைய காலம், தெற்கே ராபர்ட் கிளைவ் கால்வைத்த காலம்

அந்நேரம் ராணி மிக துணிச்சலாக நாட்டை நடத்தினாள், சுமார் 30 ஆண்டுகாலம் அவளின் சமஸ்தானம் அசைக்க முடியா பலத்துடன் இருந்தது

ராஜமாதா ஜீஜாபாயின் அவதாரமாக மக்கள் அவரை கொண்டாடினார்கள், அவள் நடத்திய வீரபோர்களால் காசி மராத்தியர் வசமாயிற்று

சுமார் 700 ஆண்டுக்கு பின் காசியில் இந்து ஆலயத்தை மீட்டவள் அவள்தான், அவுரங்கசீப் உருவாக்கிய அனைத்தயும் கலைத்து போட்டாள்

அவள் காலத்தில்தான் கங்கை படி கட்டபட்டது, ஆலயத்தின் பல விஷயங்கள் செய்யபட்டன‌

அவள் காசி மட்டுமல்ல மதுரா, சோமநாதபுரி என எங்கெல்லாமோ திருபணிகள் செய்தாள், சோமநாதபுரி ஆலயத்தில் முதல் விளக்கினை அவள்தான் ஏற்றி ஓரளவு துலங்க செய்தாள்

அந்த மகராணி சுத்தமான இந்து அரசி, அவளின் 30 ஆண்டுகால ஆட்சி காசியின் பொற்காலம். வீரசிவாஜி காசி பற்றி கண்டிருந்த கனவை எல்லாம் அவளே நிறைவேற்றி வைத்தாள்

அவளுக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு , வட இந்தியாவில் மிகபெரிய அடையாளம் அந்த அகல்யாய்பாய்

அவள் ஒரு வீரதுறவி சாயல், அப்படித்தான் அவள் கொண்டாடபடுகின்றாள் காசிபடிதுறையில் அவளுக்கு சிலை இன்றும் உண்டு

அவள் அந்த அளவு சில அடையாளங்களை மீட்டு காட்டியிராவிட்டால் இந்நேரம் ஆப்கானிஸ்தானின் காந்தாரம் போல அல்லது லாகூர் போல பல இந்து அடையாளம் காசியில் முழுக்க துடைக்கபட்டிருக்கும்

அடுத்து மோடி சொன்ன மன்னன் சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்

உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றிபோட்டவன் இவனே, இந்த சீக்கிய மன்னனின் எழுச்சிதான் ஆப்கனுக்கும் இந்தியாவுக்கும் இடையில்  ஒரு சீக்கிய சுவரை எழுப்பிற்று அதை தாண்டி படைவரமுடியா நிலையில்தான் மொகலாய வம்சம் அடிபட்டு போனது

கோஹினூர் வைரத்தை அவனே கையில் கட்டியிருந்தான், அவனேதான் மொகலாயர் ஆட்சிக்கு முழுக்க முடிவுரை எழுதினான்

அந்த சீக்கிய மன்னன் ரஞ்சித்சிங் காசியினை மீட்டெடுத்தான், சுமார் ஆயிரம் கிலோ தங்கத்தை கோவிலுக்கு அள்ளி கொடுத்தான், இந்துக்கள் மேல் அவனுக்கு அபிமானம் இருந்தது, அவனும் மறக்க முடியாதவன்

இதை எல்லாம் இன்று நினைத்து பார்த்து பல விஷயங்களை சொன்ன மோடி , அந்த காசி கரையில் உருவான சித்தன் மகாகவி பாரதியினையும் சொல்ல மறக்கவில்லை

இந்த ஒரு விஷயத்துக்காக, இந்த ஒரு வார்த்தைக்காக மோடி எனும் மாமனிதனை நாம் தமிழனாக அவர் இருக்கும் திசை நோக்கி தொழுகின்றோம்

ஆம், சுப்பிரமணி உண்மையான பாரதியாக உருவானது காசியில்தான் அந்த காசிமேல் அவனுக்கு எப்பொழுதும் பற்று இருந்தது

அந்த பாரதியின் வரிகளை மோடி சொன்னபொழுது உள்ளம் சிலிர்த்தது, இப்படி தமிழர் உணர்வறிந்த தமிழர் 
வலியறிந்த தமிழர் அருமை அறிந்த ஒரு தலைவனுக்குத்தானே தமிழகம் காலமெல்லாம் ஏங்கிற்று எனும் நன்றி கண்ணீர் உற்று பார்த்தது

"காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்" என பாரதியின் வரிகளை காசியில் அவர் சொன்னபொழுது உலக இந்து தமிழருக்கெல்லாம் தனி பெருமிதம் ஏற்பட்டது

மோடி ஆலயம் மட்டும் திறந்து வைக்கவில்லை அவர் அந்த ஆலயத்தின் அடையாளங்களை காக்க பாடுபட்ட எல்லோர் வரலாற்றையும் சொன்னார்

ஆனால் ஒரே ஒரு பெயர் மட்டும் மிஸ்ஸிங், அது குமரகுருபரர்

காசியும் குமரகுருபரரும் பிரிக்கமுடியாதவர்கள், அந்த குமரகுருபரர் நெல்லை பிறப்பு ஆனால் பிறப்பால் ஊமை திருசெந்தூர் முருகன் அருளில் வாய்பேச தொடங்கியவர் மீனாட்சி அம்மையின் அருளால் கவிபுனையும் ஆற்றலும் அருளும் பெற்றார்

முழு யோகியானார், யோகத்தின் தவத்தில் காசியின் கொடுநிலை கண்டார்

அவர்தான் காசிக்கு சென்று அந்த ஆலயம் மீள வேண்டும் என கேட்டார், ஆனால் சுல்தான் அவை அவரை நோக்கி சிங்கத்தின் மேல் வந்து உருது பேசினால் யோசிக்கலாம் என பரிகாசம் செய்தது

மறுநாளே ஒரு சிங்கம் மேல் அமர்ந்து வந்து உருதில் அவர் வைத்தை கோரிக்கை கேட்டு அரண்ட சுல்தான் கோவிலை திரும்ப கொடுத்தான்

அன்னை மீனாட்சியே சிம்மமாக வந்ததாக ஐதீகம்

இது காசியின் வரலாற்றில் நடந்த அற்புதம், அந்த அற்புதத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழக செட்டிகளே அங்கு சந்தணம் அரைக்கும் திருபணி செய்கின்றனர்

அந்த மகான் குமரகுருபர் இங்கு நிச்சயம் நினைவுகூற தக்கவர், அந்த தமிழக சித்தனை காசியில் மறக்கவே முடியாது அல்லது கூடாது

எமக்கு நம்பிக்கை உண்டு, குமரகுருபரருக்கும் காசி வளாகத்தின் ஓரத்தில் ஒரு இடம் ஒதுக்கபடும் நிச்சயம் மோடி அதை செய்வார் என நம்புகின்றோம்

இதை செய்தால்தான் காசிக்கும் தமிழகத்துகும் உள்ள பூர்வஜென்ம உறவும் தொடர்ச்சியும் அடையாளமாய் நிலைக்கும்

நாம்  வரலாற்று காலத்தை மீள பார்க்கின்றோம், 100 வருடத்துக்கு முன்பு இதெல்லாம் நடக்கமுடியா கனவு, 1980களில் இதை தொட்டால் இந்தியா உடையும் என மிரட்டல்

ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு துளி சர்ச்சையின்றி, ஒரு பதற்றமோ பழியோ இல்லாமல் அதை சாதிக்கமுடிகின்றது என்றால் அம்மனிதன் இந்த திருப்பணிக்காக பிறந்தவன் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்

காலபைரவர் காசியின் காவல் தெய்வம் என்பார்கள், அந்த காலபைரவர் பிறந்துவந்த வடிவம் மோடி என்ற சிலிர்பு கண்ணீருடன் உலக இந்துக்கள் அவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

ஆம், மோடியால் "உலக இந்துக்களின் தலைநகர் காசி"  மீட்கபட்டது மறுபடியும் வரலாறு குறித்து கொண்ட நாள் இன்று

இன்று கோடான கோடி இந்துக்கள் காசியினை மீட்கும் பொழுது எழும் அந்த "ஜெய் மகாதேவா" எனும் அந்த குரலை காசிக்காக முதலில் எழுப்பியவன் வீரசிவாஜி

இந்த கோஷத்தில் அந்த மாவீரனின் முகம் கண்முன் வராமல் போகாது, அவன் நினைவுடன் உரக்க சொல்லலாம், "ஜெய் மகாதேவா..."
---

புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள்,  
---

புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை...
-


மஹாபாரதத்தில்  மிகமிகமிக  நல்லவர்

💄 சகுனியே💪👍

சகுனி  பற்றிய ரகசியங்கள்:---                

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி.
'இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள் தானே என் கண்ணீர் துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே!!' என எண்ணியபடியே..

இடையில் இருந்த குறுவாளால் தந்தையின் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி. அவன் தந்தை சுபலனோ வலிதாளாமல் உதடு கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் செருக அமர்ந்து இருந்தான்.

கண்களைத் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

"மகனே சகுனி! எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ, இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.

நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும்என்றான். 

"அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே" என சொன்னான் சகுனி.

"மகனே, உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மனவலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப் படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்க முயற்சி செய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்காக மட்டும் காத்திரு மகனே...குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை...

இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை..

எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும்.." என்றான் சுபலன்.

"தந்தையே!! நாம் என்னதான் தவறு செய்தோம்? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்? பிறகு ஏன் நமக்கிந்த முடிவு?"- கேட்டான் சகுனி.

"அருமை மகனே! காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடனே பலியாவான் என இருந்ததால், ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.

'ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்..காந்தாரி ஓர் விதவைதானே.. ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே' என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து அவற்றை உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.

உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின்_குலத்தை நிர்மூலமாக்க... எனவே அன்பு,பாசம், கருணை, நன்றி,நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல். வெறுப்பு, பழி, வெஞ்சினம், இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள்வாயாக.." என்றான் சுபலன்.

இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை
விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். 

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

"ஐயோ..தந்தையே என்ன இது? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே!!! ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது?" என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

"மகனே..என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனத்தில் பரவும்... அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.
நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம், பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த கௌரவ குலம்தான்.. இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு..."
எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்
காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கொலி என்பதை அவர் அறியவே இல்லை.

பீஷ்மரின் கருணையால் சகுனி விடுவிக்கப் பட்டான்..காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் யுத்த களத்திலேயே மாண்டான் சகுனி.
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கிலேசம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் பகவான் கிருஷ்ணர்.. தர்மன் வரவேற்க. மற்றவர் தலை வணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.
"யாகம் தொடங்கலாமே...!
சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா?" எனக் கேட்டார். 

"ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத் தான் காத்திருந்தோம்" என்றான் அர்ஜுனன். 

"யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..?" கேட்டார் கிருஷ்ணர்.

"குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான்" என்றார் தர்மன்.

"வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல்லைக் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. 

"என்னவாயிற்று கண்ணா உனக்கு..? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது?" பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. 

"ஆம்..அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே" என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

"பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி??? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா??" கேட்டான் அர்ஜுனன்.

"அர்ஜுனா.. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீரமரணம்... இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே" என்றார் பகவான்..

"பீஷ்மரின் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை..ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் வெல்லவில்லையே..?" கேட்டான் தர்மன். 

"போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள்தான் யுதிஷ்டிரா... நீங்கள் நடைப்பிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்துள்ளது. உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்..?" கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

"அப்படிப் பார்த்தால் சகுனியின் லட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.

"அர்ஜுனா!! எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ, அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து உங்களையும் நடைப்பிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய்" என்றார் கிருஷ்ணர்.

"என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்?" அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.

"கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம் எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி" என்றார் கிருஷ்ணர்.

"பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே" பல்லைக் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். 

"இல்லை. நச்சுப் பாம்பல்ல சகுனி.. அடிபட்ட புலி அவன். பழிவாங்க பதுங்கி காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்" என்றார் கிருஷ்ணர்.

"துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே" என்றார் திருதராஷ்டிரன்.

"இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனை கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்...
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்..தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த ஒரு சாம்ராஜ்யத்தின் இளவரசனான சகுனி, அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி, உங்கள் எல்லோரையும் விட நல்லவனே "என்றார் கிருஷ்ணர்.

"என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா!!" கதறியபடி கேட்டான் திருதராஷ்டிரன்.

"அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா..முடியாதா..?" கேட்டார் கிருஷ்ணர்.

"கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டுவிட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே..என்றார் தர்மர் அமைதியாக.

"தர்மா.. வீரனாக, நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் லட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?
போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களாகும்போது, அவன் கொண்ட லட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே " என்றார் கிருஷ்ணர்.

"பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..?" கேலியாய்க் கேட்டான் பீமன்.

"பீமா..வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,
எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.

பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு."

கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். 

"பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும்." என்றான் சகாதேவன். அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.
               
  யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

"பரந்தாமா! சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? யுத்தத்தில் சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன்" என்றான் பணிவுடன்.

"சகாதேவா! காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் லட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே  அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.

என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் அவன் ஒருவனே... அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.

அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன் " என்ற பகவான்,

"என்னை விரும்பி ஏற்பதோ விரும்பாமல் ஏற்பதோ 
முக்கியம் அல்ல. 
என்னை ஏற்பது என்பது மட்டுமே முக்கியம்..
 அது ஒன்றே போதும்.
ஒருவனை நான்ஆட்கொள்ள" 
என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.
******
மார்கழிமாத முதல் புதன்கிழமையன்று  குசேலர் ஸ்ரீகிருஷ்ணபகவானுக்கு அவுல் கொடுத்து சகலசௌபாக்யங்களை பெற்றார்   வசதிவாய்ப்புகள் வந்தவுடன்  தலைக்கணம் ஆணவம் இல்லாமல் கடைசி வரை சதா சர்வ காலமும் ஸ்ரீகிருஷ்ணரை நினைத்து குசேலர் முக்தி அடைந்தார்  ***********************************                 சரணாகதிக்கு ஈடுஇணையான  பரிகாரங்கள் உலகத்தில் எந்த திருக்கோயிலிலும் கிடையாது  ***********************************   பாவத்தாலும் துரோகத்தாலும் நீ கட்டப்படும் மாடமாளிகைகள் உன் பிள்ளைகளின் தலையில் இடிந்துவிழும் என்பதை மறவாதே என்று ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா தெளிவாக கூறியுள்ளார்                              ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*******

No comments: